WhatsApp யில் வரும் கண்ட, கண்ட போட்டோ ஆட்டோ டவுன்ன்லோட் ஆவதால் (auto-download) கேலரி நிரம்பி வழிகிறதா
இதில் நமக்கே தெரியாமல் நாம் மீடியா சேவ் (Media Save) செய்வதன் மூலம் உங்கள் கேலரி நிரம்பி வழிகிறது,
ஆட்டோமேட்டிக் டவுன்லோட் எனேபில் செய்வதன் மூலம் , உங்கள் கேலரியைச் சுத்தமாக வைக்கலாம்
WhatsApp auto download
உங்கள் போனில் WhatsApp யில் வரும் கண்ட, கண்ட போட்டோ ஆட்டோ டவுன்ன்லோட் ஆவதால் (auto-download) கேலரி நிரம்பி வழிகிறதா மற்றும் இதனால் போனில் எவ்வளவு ஸ்டோரேஜ் இருந்தாலும் பத்தாது, இதில் நமக்கே தெரியாமல் நாம் மீடியா சேவ் (Media Save) செய்வதன் மூலம் உங்கள் கேலரி நிரம்பி வழிகிறது, ஒவ்வொரு முறையும் அவற்றை நீக்குவதில் நீங்கள் சோர்வடைந்திருந்தால், கவலை வேண்டாம். ஒரு சில எளிய வழிமுறைகளின் மூலம், வாட்ஸ்அப்பின் ஆட்டோமேட்டிக் டவுன்லோட் எனேபில் செய்வதன் மூலம் , உங்கள் கேலரியைச் சுத்தமாக வைத்திருக்கலாம். இதை செய்வது எப்படி என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க
ஃபோனில் ஆட்டோமேட்டிக் டவுன்லோட் அம்சத்தை போனில் எனேபில் செய்வது எப்படி?
உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
கீழே ஸ்க்ரோல் செய்து , ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா ஆப்சனுக்கு செல்லவும்.
அதைச் தட்டி , பின்னர் ‘Media Automatic download’ என்பதற்கு கீழே ஸ்க்ரோல் செய்யவும்.
இப்போது, மொபைல் டேட்டா, வைஃபை மற்றும் ரோமிங் ஆகிய மூன்று விருப்பங்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மீடியா வகைகளையும் தேர்வுநீக்கம் செய்யவும்.
உங்கள் வாட்ஸ்அப் ப்ரோபைல் போட்டோவை கிளிக் செய்து, கீழே உள்ள ‘சேட் ‘ (Chats) பகுதிக்குச் செல்லவும்.
சேட்களுக்கு மீடியாவைத் ஆட்டோ டவுன்லோட் செய்யும் வசதி உங்களுக்குக் கிடைக்கும்.
இதைச் தட்டவும் மூலம், உங்கள் தேவைக்கேற்ப போட்டோ , வீடியோக்கள் அல்லது பிற சோசியல் வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது தேர்வை நீக்கலாம்.
இந்த செட்டிங்கில் , மீடியா டவுன்லோடிங் தரத்திற்கான விருப்பத்தையும் நீங்கள் காணலாம். இங்கே, உங்கள் விருப்பத்திற்கேற்ப மீடியாவின் தரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.
WhatsApp auto download (1)
இந்த அம்சத்தை எனேபில்செய்வது ஏன் முக்கியம்?
வாட்ஸ்அப் அல்லது பிற செயலிகள் தானாகவே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்யும்போது, உங்கள் ஃபோனின் சேமிப்பகம் மெதுவாக நிரம்புகிறது. பெரும்பாலும், பயனற்ற போட்டோ மற்றும் வீடியோக்களால் கேலரி நிரம்பிவிடுவதால், அவற்றைச் சுத்தம் செய்ய நேரம் கிடைப்பதில்லை.
அதுமட்டுமின்றி, இந்த அம்சம் உங்கள் மொபைல் டேட்டாவையும் வேகமாகப் பயன்படுத்துகிறது. குறிப்பாக உயர்தரப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவிறக்கும்போது, இணைய டேட்டா மிக விரைவாகப் பயன்படுத்தப்படலாம். இது சில நேரங்களில் இணைய வேகம் குறைவதற்கு வழிவகுக்கும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், மீடியா பதிவிறக்கங்களை வைஃபை வழியாக மட்டுமே அனுமதிக்குமாறு உங்கள் அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம். இது டேட்டாவைச் சேமிப்பதுடன், உங்கள் ஃபோனையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.