ஸ்மார்ட் TV யில் இருக்கும் 60Hz, 120Hz மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் என்றால் என்ன? இதில் எதை வாங்கினால் நமக்கு பெஸ்ட்

HIGHLIGHTS

உங்கள் வீட்டுக்கு ஒரு TV வாங்க காத்திருந்தாள் இன்றைய காலத்தில் பல புதிய டெக்னாலஜி வந்துவிட்டது

இப்பொழுது OLED, QD-OLED மிக சிறந்த அட்வான்ஸ் ஆப்ஷன் வந்துவிட்டது

ஆனால் இப்பொழுதோ 120Hz மற்றும் 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் வந்துவிட்டது

ஸ்மார்ட் TV யில் இருக்கும் 60Hz, 120Hz மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் என்றால் என்ன? இதில் எதை வாங்கினால் நமக்கு பெஸ்ட்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு TV வாங்க காத்திருந்தாள் இன்றைய காலத்தில் பல புதிய டெக்னாலஜி மாறி கொண்டு இருப்பதால் டிவியில் பல வகையான டிஸ்ப்லேவை பற்றி பார்த்திருப்போம் அதில் LCD TV முன்பு அதிகம் இருந்தது ஆனால் இப்பொழுதோ Mini-LED மற்றும் QLED TVs, மற்றும் இப்பொழுது OLED, QD-OLED மிக சிறந்த அட்வான்ஸ் ஆப்ஷன் வந்துவிட்டது நாம் இந்த ஸ்க்ரீன் வித்தியாசத்தை பற்றி ஏற்கனவே பார்த்திருப்போம் ஆனால் நாம் ஒரு டிவியின் ரெப்ரஸ் ரேட் எவ்வளவு இருக்க வேண்டும் என பார்த்ததில்லை மேலும் முன்பெல்லாம் 60Hz ரெப்ரஸ் ரேட் இருந்தால் ஒரு டிவிக்கு போதுமானது ஆனால் இப்பொழுதோ 120Hz மற்றும் 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் வந்துவிட்டது மேலும் நிறைய பேருக்கு இதை பற்றி தெரிவதில்லை எனவே இதன் அர்த்தம் என்ன இதில் 120Hz மற்றும் 144Hz போன்றவற்றில் எதை வாங்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

60Hz, 120Hz, மற்றும் 144Hz என்ன இது இதில் என்ன வித்தியாசம் ?

நீங்கள் ஒரு டிவி அல்லது மானிட்டரை வாங்கும்போது 60Hz, 120Hz, அல்லது 144Hz போன்ற எண்களைக் கண்டால், அவை ரெஃப்ரெஷ் ரேட்டை (refresh rate) குறிக்கின்றன. எளிமையாகச் சொன்னால், ரெப்ரஸ் ரேட் என்பது ஒரு வினாடிக்குத் ஸ்க்ரீன் தன்னைத்தானே அப்டேட் செய்து கொள்ளும் எண்ணிக்கையாகும். இதை உங்கள் கண்களால் நேரடியாகப் பார்க்க முடியாது, ஆனால் அந்த வித்தியாசத்தை உங்களால் நிச்சயமாக உணர முடியும். ரெஃப்ரெஷ் ரேட் அதிகமாக இருந்தால், டிஸ்ப்ளே ஸ்மூத் எந்த ஒரு தடை இல்லாத விஷுவல் இருக்கும் இருக்கும்.

அதன் நன்மைகள் என்னென்ன?

இப்போது அதன் நன்மைகளைப் பற்றி பேசினால். நீங்கள் பாஸ்ட்டன அதிரடிக் சீன் அல்லது கேம்களைப் பார்க்கும்போது, ​​அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஒரு டிவி உங்களுக்குத் தெளிவான மற்றும் ஷார்ப்பான அசைவுகளைக் காட்டுகிறது. மேலும், இது ஜட்டர் (judder) எனப்படும் படபடப்புப் பிரச்சனையையும் குறைக்கிறது. வீடியோவின் ஃபிரேம்களும் டிவியின் ரெஃப்ரெஷ் ரேட்டும் ஒத்திசைவில்லாமல் இருக்கும்போது ஜட்டர் ஏற்படுகிறது. இதைச் சரிசெய்ய, டிவி ஒரே ஃபிரேமைப் பலமுறை காண்பிக்கிறது. உதாரணமாக, 120Hz ஸ்க்ரீனில் 24 FPS திரைப்படம் ஸ்மூத்தாக செயல்படும் , ஒவ்வொரு ஃபிரேமும் ஐந்து முறை காண்பிக்கப்படலாம்.

இதையும் படிங்க:ரூ,5,500 வரை இன்ஸ்டன்ட் கூப்பன் ஆபரின் கீழ் கம்மி விலையில் TV வாங்கி உங்க வீட்டை தியேட்டர் போல மாற்றுங்க

உங்களுக்கு எது பொருத்தமானது?

அதிக ரெஃப்ரெஷ் ரேட்டின் உண்மையான சுவாரஸ்யம் நீங்கள் கேம் விளையாடும்போதுதான் கிடைக்கிறது. உங்கள் கன்சோல் அல்லது கம்ப்யூட்டரில் அதிக பிரேம்களை வெளியிட முடிந்தால், ஒரு 120Hz அல்லது 144Hz டிவி அந்த பிரேம்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இது கேமிங் அனுபவத்தை இன்னும் மென்மையாக்குகிறது.

144Hz அனைவருக்கும் அவசியமில்லை. நீங்கள் திரைப்படங்களையும் சாதாரண டிவி நிகழ்ச்சிகளையும் மட்டும் பார்ப்பவராக இருந்தால், 120Hz போதுமானது. ஆனால் நீங்கள் ஒரு கேமிங் ஆர்வலராக இருந்தால், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ஒரு சிறந்த அப்டேட்டாக இருக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo