jio vs BSNL (2)
இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களான Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,299 யில் ஒரு மாதம் வரை வழங்கும் திட்டத்தை வழங்குகிறது அதே இதன் மறுபக்கம் அரசின் BSNL நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனமும் அதே ரூ,299 யில் திட்டங்களை கொண்டுள்ளது மேலும் இந்த இரு நிறுவனங்களும் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் 1 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது ஆனால் இதன் மிக பெரிய ஹைலைட் டேட்டா நன்மை தான் அப்படி என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம் வாங்க.
பிஎஸ்என்எல் ரூ. 299 விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, மேலும் இதில் தினமும் 3ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS மெசேஜ்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கஸ்டமர்களுக்கு மொத்தம் 90ஜிபி டேட்டாவைப் பெறலாம். மற்றும் இதை தவிர தினமும்100 SMS போன்றவையும் வழங்குகிறது, மேலும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 30 நாட்கள் ஆகும், அதாவது மாதம் முழுவதும் உங்கள் சிம் எக்டிவாக வைக்கலாம்.
💥Your Day Just Got a Data Upgrade. From checking in to checking out, keep your day moving with 3GB data every day. 💥
— BSNL TamilNadu (@BSNL_TN) September 15, 2026
The web link for downloading the App are
Android Playstore:–
👉https://t.co/E3E7s81jgj…
iOS App Store Link:-
👉https://t.co/7ID5Nm2U6f pic.twitter.com/1weQacOhiK
இதன் மறுபக்கம் ஜியோவின் ரூ,299 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மையுடன், தினமும் 1.5 GB டேட்டா நன்மையுடன் மொத்தம் 42 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வழங்குகிறது.
இந்த திட்டத்தின் மற்ற நன்மையை பற்றி பேசினால் இதில் JioTV, JioAICloud மற்றும் இதை தவிர JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் 35100ரூபாயில் மதிப்புள்ள Google Gemini ப்ரோ திட்டம் 18 மாதங்கள் வரை பெறலாம் 5000 GB cloud ஸ்டோரேஜ் நன்மை போன்றவை பெறலாம்
இதையும் படிங்க io VS Airtel ஒரே மாதிரியான விலையில் இருக்கும் திட்டம் மக்களை கன்ப்யூஸ் செய்துவிடும்
BSNL திட்டத்தை பற்றி பேசினால் ரூ,299 யில் வரும் இந்த திட்டத்தில் மிக பெரிய ஹைலைட் அதன் டேட்டா தான் இதில் தினமும் 3GB டேட்டா உடன் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது இதன் மறுபக்கம் ஜியோவோ தினமும் வெறும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் மொத்தம் 42GB டேட்டா வழங்குகிறது மேலும் இதில் வேலிடிட்டி விஷயத்திலும் அரசின் BSNL தான் கெத்தாக இருக்கிறது அதில் இதன் வேலிடிட்டி 30 நாட்களாகவும் மற்றும் Jio 28 நாட்கள் மட்டுமே வழங்குகிறது ,இருப்பினும் எக்ஸ்ட்ரா நன்மை பெற நினைத்தால் JioTV, JioAICloud மற்றும் JioHotstar மற்றும் Google Gemini ப்ரோ போன்ற நன்மை பெற விரும்பினால் ஜியோ திட்டம் எடுக்கலாம்