Airtel vs Jio
Reliance Jio மற்றும் Bharti Airtel இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு பல திட்டம் கொண்டு வந்துள்ளது, அந்த வகையில் இப்பொழுது இந்த நிறுவனத்திடமும் ரூ,349 யில் உள்ள திட்டம் இருக்கிறது மேலும் இரு நிறுவனமும் அன்லிமிடெட் 5G மற்றும் OTT போன்ற பல நன்மை இருக்கிறது, மேலும் இப்பொழுது இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் எது அதிக நன்மை தருகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது. இந்தத் திட்டத்துடன் வரும் சேவையின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். மேலும், ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் 50ஜிபி இலவச ஜியோ ஏஐ கிளவுட் டேட்டா உள்ளிட்ட ஜியோவின் பலன்களும் உள்ளன. பயனர்கள் ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ திட்டத்தை 18 மாதங்களுக்கும் பெறுகிறார்கள். தகுதியுள்ள சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவும் உள்ளது. கூகுள் ஏஐ ப்ரோ திட்டத்தை செயலில் வைத்திருக்க, கஸ்டமர்கள் ரூ.349 அல்லது அதற்கும் அதிகமான கட்டணத்தில் தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க அசத்தும் BSNL வெறும் ரூ,40க்கும் கம்மி விலையில் 20GB டேட்டா வழங்கும்
பார்தி ஏர்டெல் தனது ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினசரி 1.5ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் பலன்களில் 12 மாதங்களுக்கான அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் அடங்கும். இந்தப் பலனின் வேல்யூ ரூ.4,000 ஆகும். இங்குள்ள அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 300ஜிபி என லிமிட் செய்யப்பட்டுள்ளது . ஆப்பிள் மியூசிக் என்ற கூடுதல் பலனும் உள்ளது.
இந்த விஷயத்தில் இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், ஜியோவின் திட்டமே உண்மையிலேயே சிறந்தது. ஜியோ திட்டம் அதிக FUP (ஸ்டேண்டர்ட் பயன்பாட்டுக் பாலிசி ) டேட்டாவை வழங்குவதோடு, மதிப்பு அடிப்படையில் மற்ற எல்லா நன்மைகளையும் விஞ்சும் கூகுள் AI ப்ரோ நன்மையையும் வழங்குகிறது.