வெறும் ரூ,5 வித்தியாசத்தில் Jio யின் இந்த திட்டத்தில் அப்படி என்ன எபெஷால்

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ,195 மற்றும் ரூ,200 ஆகும் மேலும் இந்த இரு திட்டமும் டேட்டா வவுச்சர் திட்டமாகும், இந்த திட்டத்தின் விலை ரூ,195 மற்றும் மற்றொரு திட்டம் ரூ,200 யில் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் OTT (over-the-top) நன்மையுடன் வருகிறது ஜியோவின் ரூ,5 வித்தியாசத்தில் பெருசா என்ன நன்மை கிடைக்கிறது மேலும் இந்த இரு திட்டத்தில் வரும் நமைகள் என்ன மற்றும் வித்தியாசம் பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,200 டேட்டா பேக் திட்டம்.

Jio rs 200

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.200 திட்டம், OTT பாஸ் என்றும் அழைக்கப்படுகிறது. 4G டேட்டாவுடன், ஏராளமான OTT நன்மைகளுக்கான அக்சஸ் இது வழங்குவதால், நிறுவனம் இந்தத் திட்டத்தை இவ்வாறு விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த ரூ.200 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் 30GB டேட்டாவைப் பெறலாம் , அதனுடன் பின்வரும் OTT நன்மைகளும் கிடைக்கின்றன – YouTube Premium, Amazon Prime Video, JioHostar, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanccha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, Times Play, Tarang Plus, மற்றும் JioTV. பயனரிடம் ஏற்கனவே சேவை வேலிடிட்டி காலத்துடன் கூடிய ஒரு செயலில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் இருந்தால் மட்டுமே இந்த டேட்டா நன்மைகள் செயல்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த ரூ.200 டேட்டா பேக்கில் எந்த சேவை செல்லுபடியாகும் காலமோ, SMS அல்லது வாய்ஸ் காலிங் நன்மைகளோ சேர்க்கப்படவில்லை. IPTV மூலம் 1000-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அணுகல் உள்ளது. இவை நேரலை டிவி சேனல்கள் ஆகும்.

Jio ரூ,195 டேட்டா பேக் திட்டம்.

Jio rs 195

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.195 டேட்டா பேக், OTT பலன்களையும் உள்ளடக்கியுள்ளது. இருப்பினும், அது ஜியோஹாட்ஸ்டாருக்கு மட்டுமேயானது. இந்த ரூ.195 டேட்டா பேக்கின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு 15GB டேட்டா கிடைக்கும். இந்தத் திட்டத்துடன் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள 15GB டேட்டா 4G டேட்டாவாகும், மேலும் பயனரிடம் ஏற்கனவே ஒரு அடிப்படை ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருந்தாலும் இது செயல்படும். இந்தத் திட்டத்துடன் SMS அல்லது வாய்ஸ் காலிங் பலன்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. டேட்டா பலன்களைப் பயன்படுத்திய பிறகு, டேட்டாவின் வேகம் 64 Kbps ஆகக் குறைந்துவிடும்.

இதையும் படிங்க Jio மற்றும் Airtel ஒரு ஆண்டு வேளிடிட்டி தரும் சூப்பர் திட்டம் இதில் எது பெஸ்ட்

இதில் ரூ,200 யில் வரும் திட்டம் ஏன் சிறந்தது?

ரூ,200 யில் வரும் டேட்டா பேக்கே சிறந்தது மேலும் இதில் அதிக டேட்டா OTT நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இதன் விலை கிட்டத்தட்ட ஒரே மாதுரியாக இருக்கிறது. YouTube ப்ரீமியம் மிகவும் பெஸ்ட்டான OTT நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் YouTube கன்டென்ட் மற்றும் விளம்பரம் இல்லாமல் பார்க்க முடியும்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :