Airtel vs Jio: ரூ,699 யில் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் எது அதிக நன்மை தருகிறது

HIGHLIGHTS

Reliance Jio மற்றும் Bharti Airtel அதன் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு வருகிறது

இப்பொழுது ரூ,699 யில் வரும் ஒரே மாதுரியான ப்ரோட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த இரு திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Airtel vs Jio: ரூ,699 யில் இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் எது அதிக நன்மை தருகிறது

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio மற்றும் Bharti Airtel அதன் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு கொண்டு ஒரே மாதுரியாக பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது ரூ,699 யில் வரும் ஒரே மாதுரியான ப்ரோட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும், இரு நிறுவனங்களும் நம்பகமான சேவைகளையும் வழங்குகின்றன. ரூ.699 திட்டம் சிறந்த விலை விருப்பங்களில் ஒன்றாகும் இந்த இரு திட்டங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,699 பரோட்பேன்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 பிராட்பேண்ட் திட்டமானது, டவுன்லோட் மற்றும் அப்லோட் ஆகிய இரண்டிற்கும் 100 Mbps ஸ்பீட் அக்சசுடன் வருகிறது. இதனுடன் வொயிஸ் காலிங்கும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் உண்மையான விலை ரூ.699 + ஜிஎஸ்டி ஆகும். இதில் அன்லிமிடெட் டேட்டா உள்ளது, ஆனால் அதிவேக அக்சஸ் பிஸ்னஸ் பயன்பாடு மாதத்திற்கு 3.3TB என லிமிட் செய்யப்பட்டுள்ளது . இந்தத் திட்டத்துடன் வேறு எதுவும் சேர்க்கப்படவில்லை.

Airtel ரூ, 699 பிராட்பேண்ட் திட்டம்.

பார்தி ஏர்டெல்லின் ரூ.699 பிராட்பேண்ட் திட்டமானது, டவுன்லோட் மற்றும் அப்லோட் ஆகிய இரண்டிற்கும் 40 Mbps ஸ்பீட் அக்ஸசுடன் வருகிறது. இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் டேட்டா இணைக்கப்பட்டுள்ளது. ஜியோஹாட்ஸ்டார், ZEE5, எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே, அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், கூகுள் ஒன் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் பல போன்ற 22க்கும் மேற்பட்ட OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகள் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களும் இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உண்மையான விலையில் ஜிஎஸ்டியும் அடங்கும். நிறுவனம் கச்டமர்களுக்காக வொயிஸ் காலிங்கையும் இணைத்து வழங்குகிறது. ஆனால், லேண்ட்லைன் டூலை தனியாக வாங்க வேண்டும்.

இதையும் படிங்க: ஒரே விலை கொண்ட திட்டத்தில் ஜியோவை ஓவர்டேக் செய்த BSNL ரூ,300க்கும் கம்மி விலையில் தினமும் 3GB டேட்டாவுடன் கெத்து

இதில் எந்த திட்டம் பெஸ்ட்?

ரிலையன்ஸ் ஜியோ அதிக ஸ்பீடை வழங்குகிறது, அதே நேரத்தில் பார்தி ஏர்டெல் நேரலை டிவி சேனல்கள் உட்பட கஸ்டமருக்கு கூடுதல் பலன்களை வழங்குகிறது. திட்டங்களின் விலை ஒரே அளவில் இருந்தாலும், டெலிகாம் நிறுவனங்களிடமிருந்து உங்களுக்குத் தேவைப்படும் சேவைகளில்தான் வேறுபாடு உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile