Vivo Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G :ஒரே நாளில் அறிமுகம் செய்த இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 22-May-2024
HIGHLIGHTS

நேற்று இந்திய சந்தையில் அறிமுகமான 5G ஸ்மார்ட்போன் Vivo Y200 Pro 5G மற்றும் Infinix GT 20 Pro 5G அறிமுகம் செய்தது,

இந்த இரண்டு போன்களும் கேமிங் மற்றும் இது மட்டுமில்லாமல் இந்த இரண்டு போனின் விலையும் ஒரே மாதுரியாக இருக்கிறது,

இருப்பினும் இதை ஒப்பிட்டு இந்த போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

நேற்று இந்திய சந்தையில் அறிமுகமான 5G ஸ்மார்ட்போன் Vivo Y200 Pro 5G மற்றும் Infinix GT 20 Pro 5G அறிமுகம் செய்தது, இந்த இரண்டு போன்களும் கேமிங் மற்றும் இது மட்டுமில்லாமல் இந்த இரண்டு போனின் விலையும் ஒரே மாதுரியாக இருக்கிறது, ஆனால் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப எது உங்களுக்கு சிறப்பாக இருக்கும்? இந்த இரண்டு போன்களின் விலை, சிறப்பம்சங்கள் , கேமரா தரம் மற்றும் பேட்டரி ஆயுள் ஆகியவற்றை ஒப்பிட்டு இந்த போனில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Vivo Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G விலை தகவல்

Vivo வழங்கும் இந்த புதிய போன் 8GB + 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது மற்றும் இதன் விலை ரூ.24,999 ஆகும். இது தற்போது Vivo eStore யில் வாங்குவதற்கு கிடைக்கிறது.சில்க் க்ரீன் மற்றும் சில்க் பிளாக் கலர் வகைகளில் வாங்கலாம். இது தவிர, SBI, IDFC First, IndusInd போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்ட்களில் சிறப்பு சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது. இப்போது வாங்கும் போது, ​​வாடிக்கையாளர்களுக்கு பிளாட் ரூ.2500 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படும்.

Infinix GT 20 Pro யின் விலை மற்றும் பேங்க் ஆபர் பற்றி பேசினால்,, இது 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 22,999ரூபாயாக இருக்கிறது,, அதுவே இதன் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியடின் விலை பேங்க் ஆபருக்கு பிறகு 24,999 ரூபாயாகும். இது Mecha Blue, Mecha Orange மற்றும் Mecha Silver கலர் விருப்பங்களில் வருகிறது. இந்த போன் மே 28 முதல் Flipkartல் விற்பனை செய்யப்படும்.

#Vivo-launches-Y200-Pro-5G-smartphone-in-India

Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G: டிசைன்

Vivo Y200 Pro டிசைன் முற்றிலும் புதிய சில்க் கிளாஸ் டிசைன் உடன் வருகிறது மேலும் இது சில்க் கிரீன் மற்றும் சில்க் பிளாக் கழற்ற விருப்பங்களில் கிடைக்கிறது. இது ஒரு 3D வளைந்த காட்சியை வழங்குகிறது மற்றும் அதன் விலை பிரிவில் மெல்லிய வளைந்த காட்சி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சாதனத்திற்கு IP54 தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது, இது வாட்டர் ஸ்ப்லாஷ் மற்றும் டஸ்ட் துகள்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

இதன் மறுபுறம் Infinix GT 20 Pro யில் ஒரு Cyber Mecha Design உடன் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனில் ஒரு LED Interface வழங்கப்படுகிறது, இதில் 8 வெவ்வேறு கலர் சேர்க்கைகள் மற்றும் வெவ்வேறு லைட் எபக்ட் கிடைக்கின்றன, உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம். இந்த ஃபோன் நத்திங் ஃபோன்களைப் போலவே தோற்றமளிக்கிறது, இருப்பினும், இரண்டிற்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், நத்திங் ஃபோன்கள் டிரான்ஸ்பரன்ட் பேக் உடன் வருகின்றன.

#Infinix-GT-20-Pro-Features

Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G : டிஸ்ப்ளே

இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் முழு HD+ (2400 x 1080) பிக்சல் ரேசளுசன் 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் 80,00,000: 1 மாறுபட்ட ரேசியோ மற்றும் 105% NSTC கலர் ரேன்ஜ் தவிர, செல்ஃபி கேமராவிற்காக இந்த பேனலில் சென்டர் பஞ்ச் ஹோல் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.

Infinix GT 20 Pro யில் 6.78 இன்ச் யின் full-HD+ (1,080×2,436 पिक्‍सल्‍स) LTPS AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது டிஸ்ப்ளே ரெப்ராஸ் ரேட்டுக்கு 60Hz, 120Hz மற்றும் 144Hz இடையே மாறலாம். டிஸ்ப்ளே 2304Hz PWM ப்ரீகுவன்ஷி மற்றும் 1,300 nits ஹை பரைட்னஸ் வழங்குகிறது.

Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G: பர்போம்ன்ஸ்

பர்போமான்ஸ் பற்றி பேசினால், , இதற்காக நிறுவனம் புதிய Y200 ப்ரோவில் Qualcomm Snapdragon 695 ப்ரோசெசரை இன்ஸ்டால் செய்துள்ளது இது Adreno 619 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இது 8GB LPDDR4X ரேம், 8GB நீட்டிக்கப்பட்ட ரேம் மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் சப்போர்ட் எய்யப்படுகின்றன இந்த மொபைலில் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Infinix GT 20 Pro ஆனது MediaTek யின் Dimensity 8200 Ultimate ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி மற்றும் 12ஜிபி LPDDR5X ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் Pixelworks X5 Turbo கேமிங் சிப்பும் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது இந்த ஃபோனில் X பூஸ்ட் கேமிங் மோட் உள்ளது, இது 90fps வேகத்தில் அதிக கேம்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G: சாப்ட்வேர்

இந்த போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால், இப்பொழுது இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14 யில் தொடங்கப்பட்டது.

டூயல் சிம் (நானோ) ஸ்லாட்டுகளுடன் வரும் இன்ஃபினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான XOS 14 யில் இயங்குகிறது.

Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G:கேமரா

இதன் கேமரா பற்றி பேசினால், இதன் பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கேமரா அமைப்பில் 2x போர்ட்ரெய்ட் கொண்ட 64MP கேமரா உள்ளது, இது f/1.79 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் பொருத்தப்பட்டுள்ளது, இரண்டாவது கேமரா f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2MP பொக்கே சென்சார் ஆகும். முன் கேமராவைப் பற்றி பேசுகையில், f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது.

Vivo Y200 Pro 5G launched

Infinix GT 20 Pro மூன்று பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது. மெயின் சென்சார் 108 மெகாபிக்சல் சாம்சங் HM6 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வழங்குகிறது. மேலும் 2 மெகாபிக்சல்கள் கொண்ட இரண்டு சென்சார்கள் போனில் பொருத்தப்பட்டுள்ளன. ஜிடி 20 ப்ரோவில் 32 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G:

Vivo Y200 Pro ஐ பேட்டரி பவருக்காக இந்த போனில் நிறுவனம் 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது அதுவே Infinix GT 20 Pro ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது இந்த போனின் எடை 194 கிராம். ஆகும்

Y200 Pro 5G Vs Infinix GT 20 Pro 5G:கனெக்டிவிட்டி

கனேக்டிவிட்டிக்கு Vivo Y200 Pro 5G போனில் இரட்டை சிம், 5ஜி, வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி, IPS க்ளோனாஸ், கலிலியோ, பெய்டூ மற்றும் நாவிக் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது இது தவிர, இந்த போனில் பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.

Infinix GT 20 Pro 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் NFC, FM ரேடியோ, ஜிபிஎஸ், USB டைப்-சி போர்ட், OTG, ப்ளூடூத் ஆகியவை அடங்கும். இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. JBL யிலிருந்து இரட்டை ஸ்பீக்கர்கள் உள்ளன.

இதையும் படிங்க: Realme GT 6T இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :