உங்கள் பழைய போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்ற ஈசியான வழி

உங்கள் பழைய போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்ற ஈசியான வழி

உங்கள் வீட்டுக்கு ஒரு செக்யூரிட்டி கேமரா வைக்க வேண்டும் என நினைகுரிர்களா? ஆனால் அதிக செலவு செய்து கேமரா வைப்பது என்பது கஸ்டம் என நீங்கள் நினைத்தால், உங்களின் பழைய போனை செக்யூரிட்டி கேமரா மாற்றலாம், ஆனால் இப்பொழுது அது எப்படி என்ற கேள்வி இருக்கும் அதாவது பயன்படுத்தப்படாத ஒரு போனை பாதுகாப்பு கேமராவாக மாற்றுவதற்கு, அந்தப் பழைய போனில் ஒரு பிரத்யேக ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும், உங்கள் தற்போதைய ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி காட்சிகளைக் காணலாம். இந்த அணுகுமுறை எளிமையானதாகவும், செலவு குறைந்ததாகவும் உள்ளது இந்த 10 முறையில் உங்கள் போனை செக்யூரிட்டி கேமராவாக மாற்றலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

1.உங்களின் பழைய போனை ரெடி செய்து கொள்ளுங்கள்

முதலில் இரண்டு ஸ்மார்ட்போன்களைச் சேகரிக்கவும்: நீங்கள் இனி பயன்படுத்தாத, பழைய ஒரு போன் மற்றும் உங்கள் தற்போதைய போன் . உங்கள் பழைய போன் கண்காணிப்பு கேமராவாகவும், நீங்கள் தற்போது பயன்படுத்தும் போன் பார்வையாளராகவும் (Viewer)செயல்படும்.

2.கேமரா அப்ளிகேஷன் அமைக்கவும்.

இப்பொழுது உங்கள் ஆப் ஸ்டோரிலிருந்து செகயூரிட்டி கேமரா ஆப்பை இன்ஸ்டால் செய்யவும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டுமே ஏராளமான விருப்பங்களை வழங்குகின்றன. சிறந்த ஆப்களில் பொதுவாக ரிமொர்ட் ரெக்கார்டிங் , லைவ் ஸ்ட்ரீமிங் , லோக்கல் ஸ்டோரேஜ் , இருவழி ஆடியோ மற்றும் அசைவைக் கண்டறிதல் போன்ற அம்சங்கள் அடங்கியிருக்கும். இரண்டு போன்களிலும் ஆப்பை இன்ஸ்டால் செய்து , செட்டப் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

3.இரு போனிலும் ஒரே அக்கவுன்ட் கனெக்டிவிட்டி இருக்க வேண்டும்.

இந்த இரு போனிலும் அதே ஆப்பை இன்ஸ்டால் செய்து ஒரே அக்கவுண்டில் லாகின் செய்து இருக்க வேண்டும் மேலும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் (steps) வழிமுறைகளை பின்பற்றி சரியாக கனெக்ட் செய்யவும் அதாவது அதில் நீங்கள் உங்களின் பழைய போனை கேமரவாகவும் மற்றும் புதிய போனை அதாவது பயன்படுத்த கூடிய போனை பார்வையாளராகவும் செட் செய்ய வேண்டும்.

4.உங்களின் CCTV கேமராக இருக்கும் போனில் எலெக்ட்ரிசிட்டி சரியாக இருக்க வேண்டும்

ஒரு செக்யூரிட்டி கேமரா ஒரு நீண்ட நாள் வரை எக்டிவில் இருக்க வேண்டும், அதாவது தொடர்ந்து உங்கள் போனுக்கு எலெக்ட்ரிசிட்டி பவர் இருக்க வேண்டும் அதாவது உங்கள் போனுடன் தொடர்ந்து ப்ளக் செய்யப்பட்டிருக்க வேண்டும்,

5.பொருத்தமான லொகேஷனில் செட் செய்யவும்.

உங்களின் வீட்டையோ அல்லது வெளிபுரத்திலோ எந்த இடத்தில கண்காணிக்க நினைக்கிறிர்களோ அந்த இடத்தில் வைக்க வேண்டும் உதாரணமாக வீட்டு என்டரன்ஸ், படிக்கட்டு வழி அல்லது ரூம் எந்த பக்கத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தை சரியாக பொசிஷன் பார்த்து வைக்கவும், மேலும் அது உங்களின் குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் ஆன நாய், பூனை கையில் சிக்காத அளவுக்கு தூரமாக வைக்கவும், இதை தவிர அதில் அதிகபட்சமான (visibility) பார்வை கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.மேலும் இந்த போன் Wi-Fi ரேன்ஜ் மற்றும் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் மேலும் உங்கள் சார்ஜிங் கேபிள் சிறியதாக இருந்தால் பவர் பேங்க் பயன்படுத்தவும்.

6.உங்கள் சிஸ்டம் சரியாக வேலை செய்கிறதா என்பதை செக் செய்யவும்.

சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்த இரண்டு சாதனங்களையும் சோதிக்கவும். கேமரா தொடர்ந்து இயங்குகிறதா என்பதைச் சரிபார்த்து, பின்னர் உங்கள் வியூவர் சாதனத்திலிருந்து நேரலைக் காட்சியை அணுகவும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப, அசைவைக் கண்டறியும் உணர்திறன் மற்றும் நோட்டிபிகேஷன் போன்ற அமைப்புகளைச் சரிசெய்யவும்.

7.எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்

இந்த சிக்கனமான, நீங்களே செய்யக்கூடிய தீர்வு மூலம், விலையுயர்ந்த தொழில்முறை பாதுகாப்பு அமைப்புகள் இல்லாமல் உங்கள் சொத்தைக் கண்காணிக்கலாம். உங்களிடம் பல பழைய தொலைபேசிகள் இருந்தால், உங்கள் வீடு முழுவதையும் முழுமையாகக் கண்காணிக்க, அவற்றை உங்கள் வைஃபை நெட்வொர்க்கில் வெவ்வேறு இடங்களில் இன்ஸ்டால் செய்யவும்.

8.உங்களிடம் இன்னும் பழைய போன் இருந்தால் அதை வைட் கவரேஜ் பெற சேர்க்கவும்

இன்னும் சுற்றி முற்றிலும் நல்ல கவரேஜ் பெற வேண்டும் என நினைத்தாள் உங்களிடம் பயன்படுத்தமால் இருக்கும் போன் அல்லது உடைந்த போன் என என இருந்தாலும் அதை உங்கள் வீட்டில் தேவைப்படும் மூலைகளில் வைத்து அதி நல்ல கவரேஜ் பெறலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile