புதுசா வந்த Realme P4 Power vs Redmi Note 15 Pro இந்த இரண்டு போனில் எது பக்கா மாஸ்

புதுசா வந்த Realme P4 Power vs Redmi Note 15 Pro இந்த இரண்டு போனில் எது பக்கா மாஸ்

Redmi Note 15 Pro மற்றும் Realme P4 Power இந்தியாவில் நேற்று அறிமுகமானது இந்த இரண்டு போன்களும் 30,000ரூபாய்க்குள் அறிமுகமானது மேலும் இந்த இரு போனின் டிஸ்ப்ளே, பேட்டரி, ப்ரோசெசர் விலை போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4 Power vs Redmi Note 15 Pro டிஸ்ப்ளே

Realme P4 Power யில் 6.8 இன்ச் கொண்ட கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே .5K ரெசளுசன், 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் நிறுவனத்தின் கூற்றுப்படி, 6,500 நைட்ஸ் வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த போன் IP66, IP68 மற்றும் IP69 என ரேட்டிங் வளங்கப்படுட்டுள்ளது , அதாவது இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிச்டன்ட் நல்ல பாதுகாப்பை வழங்குகிறது. ரியல்மியின் ஆர்மர்ஷெல் பாதுகாப்பும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

Redmi Note 15 Pro யின் 6.83-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவும் உள்ளது, ஆனால் 120Hz ரெப்ராஸ் ரேட் , HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்டுடன் . இதன் உச்ச பிரகாசம் 3,200 நிட்களை அடைகிறது. பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 வழங்கப்படுகிறது, மேலும் இந்த போன் IP68 மற்றும் IP69K என மதிப்பிடப்பட்டுள்ளது.

Realme P4 Power vs Redmi Note 15 Pro ப்ரோசெசர்:

Realme P4 Power 5G போனில் MediaTek Dimensity 7400 Ultra 5G ப்ரோசெசர் உடன் 4nm Octa core ப்ரோசெசருடன் இந்த போனில் CPU Android 16 அடிபடையின் கீழ் ColorOS 16 கீழ் வேலை செய்கிறது,

அதுவே இதன் மறுபக்கம் Redmi Note 15 Pro இந்த போனில் மிக சிறந்த ப்ரோசெசருக்கு MediaTek Dimensity 7400-Ultra Octa core ப்ரோசெசருடன் வருகிறது மேலும் இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் HyperOS 2 உடன் வருகிறது

இதையும் படிங்க :Redmi Note 15 Pro+ 5G vs Vivo V60e: இந்த இரண்டு போனில் என்ன வித்தியாசம், எது பெஸ்ட் பார்க்கலாம் வாங்க

Realme P4 Power vs Redmi Note 15 Pro கேமரா :-

Realme P4 Power 5G போனில் 50MP Sony IMX882 ப்ரைமரி கேமரா OIS சப்போர்டுடன் வழங்கப்படுகிறது, அதுவே இந்த போனில் செகண்ட்ரியாக 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் EIS மற்றும் OIS நன்மை வழங்கப்படுகிறது.

இதன் மறுபக்கம் Redmi Note 15 Pro போனில் 200MP மெயின் கேமரா மற்றும் 8MPஅல்ட்ரா வைட் கேமரா உடன் செல்பிக்கு 20MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

Realme P4 Power vs Redmi Note 15 Pro பேட்டரி:-

Realme P4 Power 5G போனில் 10001mAh மிக பெரிய பேட்டரி இதனுடன் இந்த போனில் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது மற்றும் இதில் 27W ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

அதுவே இதன் மறுபக்கம் Redmi Note 15 Pro போனில் 6580mAh பேட்டரியுடன் 45Wடர்போ சார்ஜிங் மற்றும் •225W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது

Realme P4 Power vs Redmi Note 15 Pro விலை தகவல்

Realme P4 Power 5G போனில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை ரூ,27,999 . அதுவே இதன் மற்ற ஸ்டோரேஜ் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை .29,999 ரூபாய்க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபருடன் இந்த போனை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம் மேலும் இந்த போனின் முதல் விற்பனை பிப்ரவரி 5 அன்று நடைபெறுகிறது மேலும் இதில் பல ஆபர் நன்மையை பெறலாம்

இதன் மறுபக்கம் Redmi Note 15 Pro Redmi Note 15 Pro இந்தியாவில் ₹29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக ICICI மற்றும் HDFC கார்டுகள் மூலம் இரணடு போன்களுக்கும் ₹3,000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. இந்த கைபேசிகளை அமேசானில் ₹1,999க்கு முன்பதிவு செய்யலாம். Note 15 Pro சீரிஸ் பிப்ரவரி 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo