OnePlus அதன் OnePlus Nord 6 போனை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போனுக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Nord 5 போனுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இந்த OnePlus Nord 6 போனில் புதுசா என்ன கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த புதிய வெர்ஷனில் இந்த ஆண்டு மிக பெரிய அப்டேட்டாக 9000Mah பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த இரு போனில் இருக்கும் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா போன்றவற்றை ஒப்பிட்டு இந்த ஆண்டு என்ன அப்க்ரெட் செய்துள்ளது என பார்க்கலாம் வாங்க
OnePlus Nord 6,போனில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடன் இந்த போனில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மறுபுறம், Nord 5 போனில் 6.83-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் ரெஃப்ரெஷ் ரேட் 144Hz ஆகவும், ப்ரைட்னஸ் 1800 நிட்ஸ் ஆகவும் வைக்கப்பட்டுள்ளது. நார்ட் 6, கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
OnePlus Nord 6 போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென்4 ப்ரோசெசர் மற்றும் அட்ரினோ 825 ஜிபியு மூலம் இயக்கப்படுகிறது, அதேசமயம் Nord 5 போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென்3 மற்றும் அட்ரினோ 735 ஜிபியு உடன் வருகிறது. நார்ட் 6 ஆனது ஆண்ட்ராய்டு 16/Oxygen OS 16 யில் இயங்கும், அதேசமயம் நார்ட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 15/Oxygen OS 15 ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க 000mAh பேட்டரியுடன் மார்கெட்டில் புதிய OnePlus Nord 6 அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
OnePlus Nord 6 போனில் மிகப்பெரிய பலம் அதன் 9000mAh பேட்டரி ஆகும், அதுவே Nord 5-போனில் 6800mAh பேட்டரியை உடன் ஒப்பிடும்போது இது பெரியது. இரண்டு போன்களும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன.
நார்ட் 5-இன் ஆரம்ப விலை ரூ,33,999 ஆகும். Nord 6-OnePlus Nord 6 யின் ஆரம்ப விலை 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ,38,999 என்ற விலையில் வருகிறது, இரு விலைகளுக்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்காது .
நீங்கள் இப்போது ஒரு போன் வாங்க நினைத்தால், நார்ட் 5 ஒரு நம்பகமான தேர்வாகும். ஆனால், உங்களால் காத்திருக்க முடிந்தால், அதிக சக்திவாய்ந்த பிராசஸர், சிறந்த டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரியைக் கொண்ட நார்ட் 6, நீண்ட கால அடிப்படையில் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.