Moto G77 Power vs OnePlus Nord CE6 Lite: ரூ,30,000க்குள் வரும் இந்த போனில் எது பெஸ்ட்
Motorola சமிபத்தில் அதன் புதிய Moto G77 Power இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் OnePlus Nord CE6 Lite சரியான போட்டியாக இருக்கும். இந்த இரு போனின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க..
SurveyMoto G77 Power vs OnePlus Nord CE6 Lite விலை தகவல்.
மோட்டோ G77 பவர் 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹25,999 ஆகும் . ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட் 6ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹25,999 மற்றும் 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹27,999 ஆகும்.
Moto G77 Power vs OnePlus Nord CE6 Lite: டிஸ்ப்ளே
மோட்டோ G77 பவர், 2400×1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,050 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்ட 6.72-இன்ச் ஃபுல் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட், 2400×1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 680 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்ட 6.72-இன்ச் ஃபுல் HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
Moto G77 Power vs OnePlus Nord CE6 Lite: ப்ரோசெசர்
மோட்டோ ஜி77 பவர், மீடியாடெக் டைமென்சிட்டி 6400 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் மோட்டோ ஜி77 பவர் ஆண்ட்ராய்டு 16-ல் இயங்குகிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட், மீடியாடெக் டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ6 லைட், ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16-ல் இயங்குகிறது.
Moto G77 Power vs OnePlus Nord CE6 Lite: கேமரா அமைப்பு
மோட்டோ G77 பவர், பின்புறத்தில் f/1.8 அபெர்ச்சர் மற்றும் குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், f/2.2 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது மற்றும் இந்த மோட்டோ G77 பவர், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட், f/1.8 அபெர்ச்சர் மற்றும் EIS சப்போர்டுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், f/2.4 அபெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் கேமராவையும் கொண்டுள்ளது மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.
Moto G77 Power vs OnePlus Nord CE6 Lite: பேட்டரி பேக்கப்
மோட்டோ G77 பவர், 30W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 6W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க : Oppo Reno 16c 5G vs Google Pixel 9a: இந்த இரு போனில் எது பெஸ்ட், எதை வாங்கலாம்?
Moto G77 Power vs OnePlus Nord CE6 Lite: கனெக்ஷன் விருப்பங்கள்
மோட்டோ G77 பவர், 5G, 4G VoLTE, வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட்டுடன் வருகிறது. ஒன்பிளஸ் நோர்ட் CE6 லைட், 5G, இரட்டை 4G VoLTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட்டுடன் வருகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
