Moto G Max vs Vivo T5x 5G: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட் பார்க்கலாம் வாங்க
Motorola சமிபத்தில் அதன் Moto G Max போனை அறிமுகம் செய்தது.. ஆனால் இந்த போனயுக்கு சரியான போட்டியை தரும் வகையில் Vivo T5x 5G போனை கொண்டு வரப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் டிஸ்ப்ளே,ப்ரோசெசர்,கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க
SurveyMoto G Max vs Vivo T5x 5G விலை
மோட்டோ ஜி மேக்ஸ் 6ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ₹27,999 ஆகும் . விவோ டி5எக்ஸ் 5ஜி 6ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ₹24,999 , 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ₹27,999, மற்றும் 8ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ₹30,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Moto G Max vs Vivo T5x 5G டிஸ்ப்ளே
மோட்டோ ஜி மேக்ஸ், 2400×1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1050 நிட்ஸ் உச்ச பிரகாசம் கொண்ட 6.7-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. விவோ T5x 5G, 2344×1080 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசம் கொண்ட 6.76-இன்ச் Full HD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
Moto G Max vs Vivo T5x 5G ப்ரோசெசர்:
Moto G Max vs Vivo T5x 5G ப்ரோசெசர் மோட்டோ ஜி மேக்ஸ், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோ ஜி மேக்ஸ் ஆண்ட்ராய்டு 16-ல் இயங்குகிறது விவோ T5x 5G, மீடியாடெக் டைமென்சிட்டி 7400 டர்போவைக் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் விவோ டி5எக்ஸ் 5ஜி, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆரிஜின்ஓஎஸ் 6-ல் இயங்குகிறது.
Moto G Max vs Vivo T5x 5G கேமரா அமைப்பு
மோட்டோ ஜி மேக்ஸ், f/1.8 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், பின்புறத்தில் f/2.2 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவையும் கொண்டுள்ளது. மற்றும் இந்த போனில் மோட்டோ ஜி மேக்ஸ், செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிங் f/2.2 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளதுவிவோ T5x 5G, f/1.8 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமர் கேமராவையும், f/2.4 அபெர்ச்சர் கொண்ட 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராவையும் கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் . விவோ டி5எக்ஸ் 5ஜி, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக f/2.0 அபெர்ச்சர் கொண்ட 32 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க :Google Pixel 11 Pro Fold vs Samsung Galaxy Z Fold 8 Ultra: இந்த இரு போனில் எது சூப்பர்
Moto G Max vs Vivo T5x 5G பேட்டரி பேக்கப்
மோட்டோ ஜி மேக்ஸ், 30W டர்போ சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. விவோ T5x 5G, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
