iPhone Duo vs Google Pixel 11 Pro Fold (1)
Apple அதன் முதல் போல்டபில் iPhone Duo அறிமுகம் செய்தது. இதனுடன் Google Pixel 11 Pro Fold உடன் மிக சிறந்த போட்டியை வழங்குகிறது, iPhone Duo ஆனது A20 Pro ப்ரோசெசர் கொண்டுள்ளது. Google Pixel 11 Pro Fold ஆனது Google Tensor G6 ப்ரோசெசர் கொண்டுள்ளது.இந்த இரண்டு போனின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஐபோன் டியோவின் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹2,99,900, 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹3,24,900, 1டிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹3,74,900 மற்றும் 2டிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹4,49,900 ஆகும். கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டின் 16ஜிபி+512ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ₹1,86,999 ஆகும்.
ஐபோன் டியோ, நானோ டெக்ஸ்சருடன் கூடிய 7.6-இன்ச் ப்ரைமரி சூப்பர் ரெட்டினா XDR போல்டபில் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 5.4-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR வெளிப்புற டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட், 2076×2152 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 372ppi பிக்சல் டென்சிட்டி மற்றும் 3600nits ஹை ப்ரைட்னஸ் கொண்ட 8-இன்ச் OLED சூப்பர் ஆக்டுவா ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 1080×2342 பிக்சல்கள் ரெசல்யூஷன், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600nits ஹை ப்ரைட்னஸ் கொண்ட 6.5-இன்ச் OLED சூப்பர் ஆக்டுவா கவர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
ஐபோன் டியோ, 6-கோர் சிபியு, 7-கோர் ஜிபியு மற்றும் நியூரல் ஆக்சிலரேட்டர்களைக் கொண்ட ஏ20 ப்ரோ ப்ரோசெசரால் இயக்கப்படுகிறது மற்றும் இதில் ஐபோன் டியோ iOS 27 உடன் வருகிறது, கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட், கூகுள் டென்சர் ஜி6 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் அதே சமயம் கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆண்ட்ராய்டு 17யில் இயங்குகிறது.
ஐபோன் டியோவில் 48 மெகாபிக்சல் ஃபியூஷன் முதன்மை கேமராவும், பின்புறத்தில் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளன மற்றும் ஐபோன் டியோவில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக் 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. அதே சமயம், கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்டில் f/1.7 அபெர்ச்சர் கொண்ட 48 மெகாபிக்சல் கேமரா, f/2.2 அபெர்ச்சர் கொண்ட 10.5 மெகாபிக்சல் கேமரா மற்றும் f/3.1 அபெர்ச்சர் கொண்ட 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை பின்புறத்தில் உள்ளன மற்றும் இதில் கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 11 Pro Fold), f/2.2 அப்பர்ச்சர் (aperture) கொண்ட இரண்டு 10-மெகாபிக்சல் முன்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க iPhone 18 Pro Max vs iPhone 17 Pro Max: இந்த ஆண்டு புதுசா என்ன கொண்டு வந்துள்ளது?
ஐபோன் டியோ 5ஜி, GPS, வைஃபை மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வருகிறது. கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 7, ப்ளூடூத் 6, என்எஃப்சி, ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஜிபிஎஸ் உடன் வருகிறது.