Infinix Smart 20 vs Lava Bold N2 :ரூ,12,000 பட்ஜெட்டில் வரும் இந்த இரு போன்களில் எது பெஸ்ட்

Infinix இந்தியாவில் சமிபத்தில் புதிய ஸ்மார்ட்போன் Infinix Smart 20 அறிமுகம் செய்தது, மேலும் இது ஒரு 12,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதுக்கு டஃப் கொடுக்கும் வகையில் Lava Bold N2 5G போனை களத்தில் இறக்கியுள்ளது, மேலும் இந்த இந்த இரு போன்களில் இருக்கும் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்ப்போம் மேலும் உங்களின் பேட் ஜெட் ரூ,12,000க்குள் ஒரு போன் வாங்க நினைத்தால் இந்த போன்களை பார்க்கலாம்

Infinix Smart 20 vs Lava Bold N2 5G: விலை தகவல்

Infinix Smart 20, 4ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ,12,499 மற்றும் 4ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ,13,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Lava Bold N2 5G, 4ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு ரூ,12,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் சிறப்பு அறிமுக விலை ரூ,11,999 ஆகும்.

Infinix Smart 20 vs Lava Bold N2 5G: டிஸ்ப்ளே

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 20, 720×1576 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் ப்ரைட்னஸ் , 700 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் மற்றும் 19.7:9 ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்ட 6.78 இன்ச் IPS LCD HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. லாவா போல்ட் N2 5G , 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.75 இன்ச் HD+ நாட்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

Infinix Smart 20 vs Lava Bold N2 5G: ப்ரோசெசர்:-

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 20, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ G81 அல்டிமேட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே சமயம் லாவா போல்ட் N2 5G, ஆக்டா-கோர் 6nm யூனிசாக் T8200 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது .

Infinix Smart 20 vs Lava Bold N2 5G: ஒப்பரேட்டிங் சிஸ்டம்

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 20, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 16-இல் இயங்குகிறது. லாவா போல்ட் N2 5G ஆண்ட்ராய்டு 16-இல் இயங்கும்போது.

Infinix Smart 20 vs Lava Bold N2 5G: கேமரா அமைப்பு:

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 20-ன் பின்புறத்தில் f/2.0 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காளிர்க்காக f/2.0 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. அதேசமயம், லாவா போல்ட் N2 5G-ன் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக 5 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

இதையும் படிங்க Motorola Edge 70 Pro plus vs Edge 70 Pro: அந்த ஒத்த எழுத்து மாறியதால பெருசா என்ன வித்தியாசம் இருக்கு பாருங்க

Infinix Smart 20 vs Lava Bold N2 5G: பேட்டரி பேக்கப்:

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 20, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. லாவா போல்ட் N2 5G, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Infinix Smart 20 vs Lava Bold N2 5G: கனெக்ஷன் விருப்பங்கள்

5G, 4G, புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், ஓடிஜி, 3.5mm ஹெட்போன் ஜாக், NFC, எஃப்எம் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். லாவா போல்ட் என்2 5ஜி, 5ஜி, டூயல்-சிம் ஆதரவு, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :