Google Pixel 8 vs Galaxy S23:இந்த போனுக்கு இடையில் எது மாஸ்|Tech News

Google Pixel 8 vs Galaxy S23:இந்த போனுக்கு இடையில் எது மாஸ்|Tech News
HIGHLIGHTS

Google Pixel 8 Seriesபல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வந்துள்ளது.

பிக்சல் 8 போனின் ஆரம்ப விலையான ரூ.75,999 என்ற ஆபர் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy S23 உடன் Google Pixel 8 யில் எது பெஸ்ட் என்று பார்ப்போம்

Google Pixel 8 Seriesபல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வந்துள்ளது. ஏமாற்றமளிக்கும் விஷயம் என்னவென்றால், பிக்சல் 8 போனின் ஆரம்ப விலையான ரூ.75,999 என்ற அபார விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, பிக்சல் 8 ப்ரோ பற்றி பேசுகையில், இது ரூ.1,06,999 க்கு வழங்கப்படுகிறது, கடந்த ஆண்டு, நிறுவனம் பிக்சல் 7 ஐ ரூ.59,999 விலையில் அறிமுகப்படுத்தியது. கூகுள் சில சிறப்பான அம்சங்களுடன் பிக்சல் 8 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் இது விலை உயர்வை நியாயப்படுத்தவில்லை. பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy S23 உடன் Pixel 8 ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இரண்டுமே சந்தையில் உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள். யேதில் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.

Google Pixel 8 vs Samsung Galaxy S23 டிஸ்ப்ளே

கூகுள் பிக்சல் 8 ஆனது 6.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்மற்றும் HDR10 சப்போர்டுடன் வருகிறது. டிஸ்ப்ளேயின் ஹை பரைட்னாஸ் 2000 நிட்கள் மற்றும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்படுகிறது.

Samsung Galaxy S23 யில் 6.1 இன்ச் யின் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே 1080 x 2340 பிக்சல்கள் ரேசளுசன் வழங்குகிறது. இதன் ப்ரைட்னாஸ் 1750 நிட்கள் மற்றும் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 யின் ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது

Google Pixel 8 vs Samsung Galaxy S23:பர்போமான்ஸ்

Tensor G3 சிப்செட் கூகுளின் புதிய ஃபோனில் கிடைக்கிறது, இது ஒரு புதிய ப்ரோசெசர் மற்றும் இது 8ஜிபி ரேம் மற்றும் டைட்டன் எம்2 பாதுகாப்பு சிப் உடன் ஆதரிக்கப்படுகிறது. இந்த போன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 OS உடன் வருகிறது.

Samsung Galaxy S23 ஆனது Android 13 OS ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI 5.1 இல் இயங்குகிறது. சாம்சங்கின் இந்த முதன்மையானது Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் மற்றும் 8GB ரேம் கொண்டுள்ளது.

Pixel 8 vs Samsung Galaxy S23:கேமரா

பிக்சல் 8 இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா PDAF, Laser AF, OIS சப்போர்டுடன் வழங்கப்படுகிறது. கேமரா 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸால் ஆதரிக்கப்படுகிறது. செல்ஃபிக்காக 10.5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Samsung Galaxy S23 ஐப் கேமரா பற்றி பேசினால், இதில் PDAF மற்றும் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் (3x ஆப்டிகல் லென்ஸ்) மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸைப் பெறுகிறது. போனின் முன்பக்கத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Pixel 8 vs Samsung Galaxy S23:பேட்டரி

கூகுள் பிக்சல் 8 ஆனது 4575mAh பேட்டரியைப் பெறுகிறது, இது 27W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 18W வயர்லெஸ் சார்ஜிங் சார்ஜிங் உடன் வருகிறது.

அதுவே Samsung Galaxy S23 யில் 3900mAh பேட்டரி கிடைக்கிறது இதனுடன் இதில் 25 W பாஸ்ட் சார்ஜிங் 15 வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது.

Pixel 8 vs Samsung Galaxy S23: விலை தகவல்

கூகுள் பிக்சல் 8 அக்டோபர் 12 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளில் ரூ.8000 தள்ளுபடியும் வழங்கப்படும், அதன் பிறகு போனின் விலை ரூ.75,999க்கு எடிசன் ரூ.67,999 ஆக மாறும்.

Samsung Galaxy S23 ஐ Amazon யில் 79,999 ரூபாய்க்கு வாங்கலாம். SBIகிரெடிட் கார்டு மூலம் ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் நிறுவனம் வழங்குகிறது.

இதையும் படிங்க :Pixel 8 Series அறிமுகம் Iphone 15 விட விலை அதிகம் அப்படி என்ன இருக்கு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo