Google Pixel 11 vs iPhone 17: புதுசா அறிமுகமான இந்த இரு போனில் யாரு கெத்து
Google அதன் Google Pixel 11சீரிஸ் இந்தியா மட்டுமின்றி உலக சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த சீரிஸ் கீழ் Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, மற்றும் Pixel 11 Pro Fold.ஆகிய போங்கள் அடங்கும் . நாம் ஏற்கனவே இதன் அறிமுக செய்தியை பார்த்தோம் எனவே இப்பொழுது Google Pixel 11 உடன் போட்டி போடும் வகையில் ஈடு கொடுப்பது எது என பார்க்கும்போது, சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட iPhone 17 கொண்டு வரப்பட்டது இப்பொழுது இந்த இரண்டு போன்களின் டிஸ்ப்ளே,ப்ரோசெசர், பேட்டரி பேக்கப் மற்றும் கேமரா போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyGoogle Pixel 11 vs iPhone 17: டிஸ்ப்ளே
Google Pixel 11 போனில் 1, 6.3-இன்ச் டிஸ்ப்ளே உடன் (1,080 x 2,424 பிக்சல்கள்) OLED ஆக்சுவ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் , 3,000 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் HDR சப்போர்ட் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. பிக்சல் 11-இன் டைமென்ஷன் 152.8x72x8.6 மிமீ ஆகவும், இதன் எடை சுமார் 197 கிராம் ஆகவும் உள்ளது. இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 தரமதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
iPhone 17: இதன் மறுபக்கம் ஐபோன் 17, 6.3-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED திரையைக் கொண்டுள்ளது, இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், வழங்குகிறது. இந்த ப்ரோமோஷன் ஸ்க்ரீன், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே (always-on display) வசதியையும் வழங்குகிறது. இந்தத் திரையில் செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு அம்சம் உள்ளது, இது ஐபோன் 16 வரிசையை விட மூன்று மடங்கு அதிக கீறல் பாதுகாப்பை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இதன் அளவு 149.6×71.5×7.95 மிமீ மற்றும் எடை சுமார் 177 கிராம் ஆகும். இது கூகுள் பிக்சல் 11-க்கு இணையான உட்புகல் பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்குகிறது.
Google Pixel 11 vs iPhone 17:ப்ரோசெசர்
Google Pixel 11 போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், Tensor G6 சிப்செட் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Titan M3 செக்யூரிட்டி ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் நிறுவனம் இந்த புதிய சிப்செட் மூலம் மிக சிறந்த பர்போமான்ஸ் அப்க்ரேட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Tensor G5சிப்செட்டுடன் அப்க்ரேட் வெர்ஷன் ஆகும்.
iPhone 17 போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இந்த போனில் A19 சிப்செட்டுடன் இந்த போனில் 16-core நியூறல் எஞ்சின் ஆரு கோர் CPU, ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.இதனுடன் இதில் AI இன்ப்ரேன்ஸ் போன்ற மிக சிறந்த அம்சம் கொண்டுள்ளது.
Google Pixel 11 vs iPhone 17: கேமரா
கூகுள் பிக்சல் 11: கூகுள் பிக்சல் 11, மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 1/1.56-அங்குல சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் (f/1.7) முதன்மை சென்சார் முதன்மையானதாகும். மேலும், இது 120-டிகிரி பார்வைக்கோணத்துடன் கூடிய 13-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் வரை வழங்கும் 10.8-மெகாபிக்சல் (f/3.1) டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. இது 10.5-மெகாபிக்சல் (f/2.2) செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
ஐபோன் 17: மறுபுறம், ஐபோன் 17 ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில், சென்சார்-ஷிஃப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 2X ஆப்டிகல் ஜூம் மற்றும் 52mm ஃபோக்கல் லென்த் கொண்ட 48-மெகாபிக்சல் (f/1.6) ஃப்யூஷன் பிரதான கேமராவும், மேக்ரோ புகைப்படம் எடுக்கும் திறன் கொண்ட 48-மெகாபிக்சல் (f/2.2) ஃப்யூஷன் அல்ட்ராவைடு கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில், சென்டர் ஸ்டேஜ் அம்சத்துடன் கூடிய 18-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
Google Pixel 11 vs iPhone 17:பேட்டரி பேக்கப்
Google Pixel 11 போனின் பேட்டரி பேக்கப் பற்றி பேசினால், இதில் 4,985mAh பேட்டரியுடன் 30W வயர்ட் சார்ஜிங் மற்றும் 25W வயர்லஸ் பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்குகிறது
அதுவே இதன் மறு பக்கம் iPhone 17 போனில் ஆப்பில் எப்பொழுது அதன் பேட்டரி பத்தி வெளியே சொல்லாது, இருப்பினும் Phone 16. போனுடன் ஒப்பிடும்போது iPhone 17 போனில் எட்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி வளங்குப்வதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:Google Pixel 11 சீரிஸ் அறிமுகம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன போன் எல்லாம் இருக்கு பாருங்க
Google Pixel 11 vs iPhone 17: விலை தகவல்.
கூகுள் பிக்சல் 11: இந்தியாவில் கூகுள் பிக்சல் 11-இன் விலை, 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுக்கு ரூ. 89,999-இல் இருந்து தொடங்குகிறது. அதே சமயம், உயர் ரக 12ஜிபி + 512ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 1,04,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஃப்ராஸ்ட், ஹைபிஸ்கஸ், அப்சிடியன் மற்றும் பிஸ்தா ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஐபோன் 17: மறுபுறம், ஐபோன் 17-இன் அடிப்படை 256GB ஸ்டோரேஜ் பவர் கொண்ட மாடலின் விலை தற்போது இந்தியாவில் ரூ. 82,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . இருப்பினும், உயர்நிலை 512GB ஸ்டோரேஜ் பவர் கொண்ட மாடலின் விலை ரூ. 1,02,900 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய கலர்களில் விற்பனைக்கு உள்ளது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
