AC Sleep mode setting
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இப்படி பட்ட நிலையில் AC இல்லாமல் இருப்பது என்பது கடினம், மேலும் வெயில் காலத்தில் கொஞ்சம் உஷ்ணம் இருந்தாலும் தூக்கம் வருவது என்பது கடினமாகிறது இதன் காரணமாக பெரும்பாலும் மக்கள் இரவு முழுக்க AC இயக்குகிறார்கள் இதனால் உங்களின் ரூம் என்னவோ செம்ம கூல் ஆவது நிச்சயம் ஆனால் இதன் கூடவே சேர்ந்து உங்களின் எலெக்ட்ரிசிட்டி பில் அதிகரிக்கும், மேலும் உங்கள் ரூம் குளு குளு எனவும் இருக்க வேண்டும் அதே சமயம் கரண்ட் பில் பிரச்சனையும் இருக்க கூடாது என நினைத்தால் உங்கள் ஏசியில் Sleep Mode ம மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் இதன் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
Sleep Mode என்பது மிக சிறப்பான அம்சமாகும் இந்த அம்சம் இன்றைகாலத்தில் பல மாடர்ன் AC யில் இந்த அம்சம் வழங்கப்படுகிறது , ஆனால் இதில் பெரிய வித்தியாசம் என்ன என்றால் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு மாடலிலும் வெவ்வேறு முறையில் வேலை செய்கிறது, மேலும் சில AC யில் Sleep Mode வெறும் டைமர் போல வேலை செய்கிறது மற்றும் சில சமயம் AC தானாகவே ஆப் ஆகிவிடுகிறது மேம்பட்ட மாடல்களில், இந்த அம்சம் ரூமின் வெப்பநிலையை படிப்படியாக அதிகரிப்பதால், இரவு நேரத்தில் ரூம் அதிகப்படியாகக் குளிரடைவதில்லை.
இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் உறங்கும்போது உங்கள் ஏசியை மிகக் குறைந்த டேம்ப்ரேட்ஜரில் வைத்திருந்தால், ஸ்லீப் மோடு செயல்படுத்தப்பட்டவுடன் ஏசி படிப்படியாக வெப்பநிலையை அதிகரிக்கும். இது அதிகப்படியான கூலிங் தடுத்து, மிகவும் வசதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.
இதையும் படிங்க கொளுத்தும் வெயிலை சமளிக்க ஏழையின் ஏசி வெறும் ரூ,5000க்குள் வரும் பெஸ்ட் Air cooler
இந்த Sleep mode கீழ் Fan ஸ்பீட் குறைக்கிறது, இதன் மூலம் ஏசியின் சதம் குறைக்கப்படுகிறது, இதன் மூலம் உங்கள் ரூமில் கட கடவென சத்தமில்லாமல் நிம்மதியாக தூங்கலாம்
இன்னும் ஒரு சில மாடலில் நீங்கள் Sleep Mode யின் டைமர் உடன் பயன்படுத்தலாம், இதன் மூலம் AC தானாகவே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நின்று விடுகிறது
ஸ்லீப் மோடு வசதியான உறக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மின்சாரத்தைச் சேமிக்கவும் உதவுகிறது. சாதாரண கூலிங் முறையில், ஏசி இரவு முழுவதும் ஒரு சீரான வெப்பநிலையைப் பராமரிக்க முயற்சிக்கிறது, இது மின் நுகர்வை அதிகரிக்கிறது. ஸ்லீப் மோடில், ஏசி படிப்படியாகக் கூளிங்கை குறைப்பதோடு, பேன் ஸ்பீடை குறைக்கிறது. இது ஏசியின் மீதான சுமையைக் குறைத்து, மின் நுகர்வையும் குறைக்க உதவும்.
கோடைக்காலத்தில் நீங்கள் இரவு முழுவதும் ஏசியை இயக்கினால், ஸ்லீப் மோடைப் பயன்படுத்துவது வசதி மற்றும் மின்சாரச் சேமிப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.