இரவு முழுக்க போன் பயன்படுத்துவோர் எச்சரிக்கை! மொபைல் ஸ்க்ரீன் ப்ரைட்னஸ் கண்களுக்கு பாதிப்பு,சரி செய்வது எப்படி?
இன்று ஸ்மார்ட்போன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகிரகள் மேலும் நாம் கண் விழிக்கும் முதல், இரவு தூங்கும் வரை மணி கணக்காக போன் பயன்படுத்தி வருகிறார்கள், இதில் இரவு அதிக நேரம் போன் பார்க்கும்போது கண் பார்வை போகும் நிலை ஏற்ப்படுகிறது இருப்பினும், இந்தச் செயல்பாட்டில் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்: அதுதான் நமது போனின் ‘பிரைட்னஸ்’ (brightness) அல்லது கடுமையான சூரிய வெளிச்சத்தில் ஸ்க்ரீன் மூலம் ஏற்படும் ப்ரைட்னாஸ் 100%-ஆக வைப்பது நியாயமானதே என்றாலும், எல்லா நேரங்களிலும் போனை முழு ப்ரைட்னஸ் வைத்திருப்பது உங்கள் கண்களுக்கும் உங்கள் போன்களுக்கு மெல்ல மெல்லப் பாதிப்பை ஏற்படுத்துகிறது அது எப்படி
Surveyஉங்கள் போன் ஸ்க்ரீனை எப்போதும் அதிகபட்ச ப்ரைட்னாஸ் உடன் வைத்திருக்கும்போது, உங்கள் கண்கள் அதிகப்படியான வெளிச்சத்தின் மூலம் நேரடியாக வெளிப்படுகின்றன. இதனால், கண்கள் வறண்டு சிவந்துவிடுகின்றன. தொடர்ந்து ப்ரைட்டான வெளுச்சதை பார்ப்பது, மக்கள் குறைவாகக் கண் சிமிட்டுவதற்குக் காரணமாகிறது, இது மேலும் கண்ணை வறட்சியை உண்டு பண்ணுகிறது மேலும் அதிகரிக்கிறது. சில நாட்களுக்குள், பார்வை மங்கி, கடுமையான தலைவலி ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தால், கண் டிரைனஸ் அதிகரித்து, நீங்கள் நிரந்தரமாகக் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஏன் அதிக ப்ரைட்னஸ் கண்ணை பாதிக்கலாம்.
- நாம் லேப்டாப் மற்றும் TV சுமார் 20–30cm தூரத்தில் வைக்கிறோம்,ஆனால் போனாயோ மிக அருகில் வைக்கிறோம்.
- ஸ்க்ரீன்ளில் கவனம் செலுத்தும்போது நாம் குறைவாகக் கண் சிமிட்டுகிறோம் — இயல்பான நிமிடத்திற்கு 15-20 சிமிட்டல்கள் என்ற விகிதத்திலிருந்து, நிமிடத்திற்கு 5-7 சிமிட்டல்கள் எனக் குறைந்து, கண்கள் வறண்டு எரிச்சலடைகின்றன.
- ஸ்க்ரீன்கள் நீல லைட் ( blue light) வெளியிடுகின்றன , இது மற்ற புலப்படும் லைட்டை விடக் குறைந்த அலைநீளத்தையும் அதிக பவரையும் கொண்டிருப்பதால், கண்களுக்கு மேலும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
- லோ ஸ்க்ரீன் லைட் வேறுபாடு, கண் கூச்சம் மற்றும் தானாகவே மாறும் ப்ரைட்னஸ் ஆகியவை, ஒருமுகப்படுத்துவதற்கு கண்களைக் கடினமாக பாதிப்பு கொண்டு வர வைக்கின்றன.

Blue Light ஆபத்து தரலாம்.
உங்கள் ஸ்மார்ட்போன் திரையிலிருந்து வெளிப்படும் குளிர்ச்சியான, பிரகாசமான ஒளி உண்மையில் ‘நீல ஒளி’ ஆகும். நீங்கள் இருட்டில் உங்கள் கைபேசியை முழு பிரகாசத்தில் பயன்படுத்தும்போது, இந்த ஒளி இன்னும் பகல் நேரம்தான் என்று உங்கள் மூளையை ஏமாற்றுகிறது. இது, நம்மைத் தூங்க வைக்கும் ஹார்மோனான மெலடோனினை உடல் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, நீங்கள் இரவு முழுவதும் புரண்டு படுத்து, காலையில் எரிச்சலுடன் எழுகிறீர்கள்.
பேட்டரி குறைவாகலம்
ஸ்க்ரீனின் ப்ரைட்னஸ் அதிகரிப்பது மூலம் அதிக பவர் செலவழிக்கிறது. ஸ்க்ரீன் எப்போதும் அதிகபட்ச ப்ரைட்னஸில் இருந்தால், மதியத்திற்குள் உங்கள் போனில் பேட்டரி தீர்ந்துவிடும். உங்கள் போனை அடிக்கடி சார்ஜ் செய்வது அதன் ஆயுட்காலத்தைக் குறைக்கிறது. சார்ஜ் செய்வது உங்கள் போனை சூடாக்குகிறது, மேலும் முழு ப்ரைட்னாஸ்னால் ஏற்படும் ஒருங்கிணைந்த வெப்பம் பேட்டரியை வீங்கச் செய்து, உங்கள் போன் வெடிக்கவோ அல்லது நிரந்தரமாகச் செயலிழக்கவோ காரணமாகலாம்.
OLED அல்லது AMOLED டிஸ்ப்ளே பெரும் ஆபத்து
உங்களிடம் OLED அல்லது AMOLED ஸ்க்ரீன் கொண்ட விலையுயர்ந்த போன் இருந்தால், முழுமையான ப்ரைட்னாஸ் இன்னும் ஆபத்தானது. இந்தத் ஸ்க்ரீனகளில் ‘ஸ்கிரீன் பர்ன்-இன்’ என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். அதாவது, நீங்கள் ஒரு ஆப்யின் ஐகானையோ அல்லது பாட்டனையோ ப்ரைட்னஸ் அதிக வெளுச்சதில் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தால், அந்தப் படத்தின் ப்ளர் ஏற்ப்படலாம், நிரந்தரமான பிரிண்ட் ஸ்க்ரீனில் பதிந்துவிடும், அதைச் சரிசெய்ய முடியாது.
போன் ப்ரைட்னஸ் ஸ்க்ரீனிலிருந்து பாதுகாப்பாக வைப்பது எப்படி ?

- ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் , 20 வினாடிகள் ஓய்வு எடுத்துக்கொண்டு, 20 அடி (சுமார் 6 மீட்டர்) தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பாருங்கள், இதன் மூலம் பார்வை சரி செய்யலாம்.
- ஸ்க்ரீன் ப்ரைட்னாஸ் சரி செய்யவும்:- ஆட்டோமேட்டிக் ப்ரைட்னஸ் (auto-brightness) அம்சங்களைப் பயன்படுத்தவும் , ஆனால் தேவைப்படும்போது மேனுவலாக சரிசெய்யவும்.
- கண்களைச் சுருக்குவதைக் குறைக்க, text size அதிகரிப்பதன் மூலம் உங்கள் கண்ணை பாதுகாக்கும .
- குறைந்த வெளிச்சம் உள்ள சூழ்நிலைகளில் கண் கூச்சத்தைக் குறைக்க டார்க் மோடைப் (dark mode)பயன்படுத்தவும் .
- ப்ரைட்னாஸ் செட்டிங்:- பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இப்போது “dark mode” அல்லது “warm colour” என்ற உள்ளமைக்கப்பட்ட அமைப்பு உள்ளது. இது Blue Light Filter குறைக்கிறது, குறிப்பாக மாலை நேரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- போனை எந்த தூரம் பிடிக்கனும்:- உங்கள் போனை வசதியான தூரத்தில், அதாவது பொதுவாக உங்கள் கண்களிலிருந்து 40-45 செ.மீ. (ஏறக்குறைய ஒரு கை நீளத் தூரத்தில்) பிடித்துக் கொள்ளுங்கள். அதை மிக அருகில் பிடித்துக் கொள்வது, உங்கள் கண்களை உள்நோக்கித் திரும்பவும், ஒருமுகப்படுத்தவும் கட்டாயப்படுத்துகிறது. இந்த இரண்டுமே காலப்போக்கில் சோர்வை ஏற்படுத்தும்.
- அடிகடி கண் சிமிட்டவும் :-உங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தும்போது தவறாமல் கண் சிமிட்ட நினைவூட்டுங்கள். நீங்கள் பணிபுரியும் இடத்திற்கு அருகில் ஒரு சிறிய ஒட்டும் தாளை ஒட்டி வைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். கண் சிமிட்டுவது கண்ணின் கருவிழி முழுவதும் கண்ணீர்ப் படலத்தைப் பரப்பி, கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கிறது மற்றும் வறண்ட கண்களால் ஏற்படும் எரிச்சல், சொரசொரப்பான உணர்வைக் குறைக்கிறது.
- ஸ்க்ரீன் பாக்கும்போது கண்ணாடி போடுவது நல்லது:நீல ஒளியைத் தடுக்கும் மூக்குக் கண்ணாடி(Blue Light Blocking Glasse) வில்லைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றன. மேலும், இவை மருத்துவரின் பரிந்துரைப்படியும், பரிந்துரை இல்லாமலும் கிடைக்கின்றன. இவற்றின் நீண்டகால செயல்திறன் குறித்த சான்றுகள் இன்னும் உருவாகி வரும் நிலையில், நீண்ட நேரம் ஸ்க்ரீனை பயன்படுத்தும்போது தலைவலி குறைவதாகவும், சௌகரியம் அதிகரிப்பதாகவும் பல பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
- படுக்கையின் போது லிமிட்டாக பயன்படுத்தவும்:நீங்கள் தூங்கும் முன் 30–60 நிமிடங்கள் முன் போன் வைத்துவிட வேண்டும் அதிக நேரம் ஸ்க்ரீன் பார்க்கும்போது கண்ணுக்கு அழுத்தம் ஏற்பட்டு சிறிய வயதிலேயே கண் பாதிக்க கூடும்
குழந்தைகளுக்கான சிறப்பு கவனங்கள்
குழந்தைகளின் கண்கள், அதிக நேரம் ஸ்க்ரீனை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகளால் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவை. அமெரிக்க கண் மருத்துவக் கழகமும் பிற உலகளாவிய அமைப்புகளும் பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கின்றன:
- 18 முதல் 24 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் ஸ்க்ரீனை பயன்பாடு இல்லை (வீடியோ கால்களை தவிர).
- 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட ஸ்க்ரீன் நேரம் (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரம்).
- கிட்டப்பார்வை அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்க, தினமும் 1-2 மணி நேரம் வெளியில் செலவிடுங்கள்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
