IRCTC rule
எந்தவொரு ரயிலுக்கும் முன்பதிவு நேரம் திறந்த பிறகு முதல் 15 நிமிடங்களில் பொது புக்கிங் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, பயணிகள் ஆதார் வெரிபிகேஷன் IRCTC அக்கவுன்டகளை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிகளை ரயில்வே வாரியம் அக்டோபர் 1, 2025 முதல் அமல்படுத்த உள்ளது. தற்போது தட்கல் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் இந்த விதி, மோசடியான புக்கிங்களைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு நியாயமான அக்சஸ் உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் UPI சேவை, IRCTC மற்றும் பென்ஷன் போன்றவற்றில் ஆகிய மூன்று சேவைகளிலும் அக்டோபர் 1 முதல் மாற்றம் இருக்க போகிறது அவை முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
1 தீபாவளி, போன்ற முக்கிய பண்டிகைகள் மற்றும் திருமண சீசன்களின் போது, ரயில் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரிக்கும், குறிப்பாக பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு விண்டா திறக்கும் போது. இது தட்கல் முன்பதிவின் போது காணப்படும் நெரிசலைப் போலவே, பொது முன்பதிவு மூலம் டிக்கெட்டுகளைப் பெற முயற்சிக்கும் பயணிகளிடையே கடுமையான போட்டிக்கு வழிவகுக்கிறது. புதிய ஆதார் அடிப்படையிலான விதி புக்கிங் செயல்முறையை பயனுள்ளதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரயில் டிக்கெட் முன்பதிவுடன் ஆதார் அங்கீகாரம் இணைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜூலை மாதம், தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய IRCTC அக்கவுண்ட்களுக்கு ஆதார் வெரிபிகேஷன் இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது. ஆதார் வெரிபிகேஷன் இல்லாமல், பயனர்கள் IRCTC வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது.
பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க அக்டோபர் 1 ஆம் தேதிக்கு முன்பே தங்கள் ஆதார் எண்களை ஐஆர்சிடிசி கணக்குகளுடன் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பொது முன்பதிவு முன்பதிவு நேரம் தினமும் அதிகாலை 12:20 மணி முதல் இரவு 11:45 மணி வரை இயங்கும், பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கும். டிக்கெட் தேவை அதிகமாக இருக்கும்போது முன்பதிவு விண்டோ முக்கியமான முதல் 15 நிமிடங்களுக்கு மட்டுமே புதிய விதி பொருந்தும்
இதையும் படிங்க:IRCTC புது ரூல் அக்டோபர் 1 முதல் மாற்றம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் தெருஞ்சிகொங்க
2 இதை தவிர இரண்டாவதாக Google Pay,Phonepe போன்ற UPI யில் மாற்றம் இருக்கிறது (Unified Payments Interface) அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய மாற்றங்களால் அடுத்த மாதம் முதல், பயனர்கள் PhonePe, GPay அல்லது பிற பேமன்ட் ஆப்களைப் பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்கள் அல்லது வேறு யாரிடமிருந்தும் நேரடியாக பணம் கோர முடியாமல் போகலாம். UPI யின் “கலெக்ட் ரிக்வெஸ்ட்” அல்லது “புல் டிரான்ஸாக்ஷன்” அம்சம் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இது வேறொருவருக்கு பேமன்ட் ரெகுவஸ்ட் அனுப்பி பணம் கேட்க உங்களை அனுமதித்த அதே அம்சமாகும். ஆன்லைன் மோசடி மற்றும் ஃபிஷிங்கைத் தடுக்கவும், UPI பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக்கவும் NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
3 பென்ஷன் / ஓய்வூதிய கட்டணங்களில் மாற்றம்: ஓய்வூதிய தாரர்களுக்கான இந்த மாற்றம் – பெரும்பாலும் என்பிஎஸ் (NPS), யுபிஎஸ் (UPS), அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana) மற்றும் என்பிஎஸ் லைட்டில் (NPS Lite) சேர்ந்தவர்களுக்கான மாற்றம் ஆகும் (PFRDA), தேசிய ஓய்வூதிய முறையில் (NPS) ஒரு பெரிய சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அக்டோபர் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும். பல திட்ட கட்டமைப்பு என்று அழைக்கப்படும் இந்த சீர்திருத்தம், இப்போது அரசு சாரா துறை ஊழியர்கள், கார்ப்பரேட் வல்லுநர்கள் மற்றும் கிக் தொழிலாளர்கள் ஒரே PAN நம்பரை பயன்படுத்தி பல திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும்.