உங்கள் வீட்டுக்கு AC போல காற்று, இந்த ஐஸ் சேம்பர் கூலர் குளு குளு என கூலிங் தரும் அது எப்படி?
கூலரில் ஐஸ் கட்டி வைப்பது உங்களுக்குக் குளிர்ச்சியான காற்றைத் தரும். இது உங்களுக்கு விசித்திரமாகவோ அல்லது கட்டுக்கதையாகவோ தோன்றினால், அது உண்மையல்ல. ஏர் கூலரில் ஐஸ் கட்டியை வைப்பது அதன் காற்றை இன்னும் குளிரச் செய்கிறது. இதன் மூலம், ஏர் கூலரை ஒரு சிறிய ஏசியாக மாற்ற முடியும். இதை நாங்கள் கூறவில்லை, ஆனால் க்ராம்ப்டன் மற்றும் வோல்டாஸ் போன்ற நிறுவனங்கள் கூறுகின்றன. சந்தையில் பனிக்கட்டி வைக்கும் அறை கொண்ட கூலர்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? சிறந்த குளிரூட்டலுக்காக நீங்கள் அதில் பனிக்கட்டியை வைக்கலாம். இது உங்களுக்கு நல்ல மற்றும் நீண்ட கால கூளிங்கை தரும். வாருங்கள், அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Surveyஐஸ் சேம்பர் கொண்ட கூலரில் என்ன ஸ்பெஷல் ?
ஐஸ் சேம்பர் என்பது ஏர் கூலர்களில் உள்ள ஒரு சிறப்புப் பெட்டியாகும். ஏர் கூலரில் பனிக்கட்டியைச் சேர்ப்பது குளிரூட்டும் திறனை மேம்படுத்தும். இந்த கூலர்கள் பெரும்பாலும் வெப்பநிலை கட்டுப்பாடு போன்ற அம்சங்களுடன் வருகின்றன. இந்த கூலர்கள் பொதுவாக சிறந்த மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் குளிரூட்டலை வழங்குகின்றன. ஏர் கூலரின் ஐஸ் சேம்பரில் பனிக்கட்டி சேர்க்கப்படும்போது, பேட்கள் குளிர்ச்சியடைந்து குளிர்ந்த காற்றை உருவாக்குகின்றன என்று க்ராம்ப்டனின் வலைப்பதிவு விளக்குகிறது. இருப்பினும், அதிகப்படியான பனிக்கட்டியைச் சேர்ப்பது ஆவியாதல் செயல்முறையை மெதுவாக்கி, குளிரூட்டும் திறனை எதிர்மறையாகப் பாதிக்கும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது. எனவே, சரியான அளவு ஐஸ் கட்டியை சேர்ப்பது முக்கியம்.
இந்த ஏர் கூலர் எப்படி சில்லென காற்று தருகிறது

இதில் முதல் தெரிய வேண்டிய விஷயம் கூலிங் கேஸ் இல்லாத ஏர் கூலர் எப்படி குளு குழுவென கூலிங் தருகிறது, ஏர் கூலர் ‘ஏவப்றேட்டிவ் கூலிங் ‘ அதாவது ஏவப்ரேச்னாக கூலிங் செயல்முறையில் இயங்குகிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஏசிகள் வெப்பநிலையைக் குறைக்க கூளிங்கை பொருளைப் பயன்படுத்துகின்றன. அதே சமயம், ஏர் கூலர்கள் நீரின் இயற்கையான எவப்ரேஷன் நம்பி வெப்பநிலையைக் குறைக்கின்றன. எளிமையாகச் சொன்னால், கூலரின் பேட்கள் அல்லது புல் மீது தண்ணீர் விழுந்து, வெளியிலிருந்து வரும் சூடான காற்று அவற்றுடன் மோதும்போது, தண்ணீர் ஆவியாகி, கூளிங்கான காற்று மட்டுமே எஞ்சுகிறது.
இதையும் படியுங்க வெறும் ரூ,5000க்கும் குறைந்த விலையில் வரும் Portable AC உங்க வீட்டு மூலை முடுக்கெல்லாம் காற்று வீசும்
ஐஸ் கட்டி மூலம் எப்படி அதிக கூலிங் தருகிறது

ஐஸ்கட்டி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு ஏர் கூலரின் கூலிங் எபக்ட் நீரின் அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், ஐஸ் கட்டி சேர்ப்பது கூடுதலாக ஒரு கூலிங் லேயர் அளித்து, ரூம் வெப்பநிலையை மேலும் குறைக்கிறது. இந்த எளிய மாற்றம், அந்தக் கூலரை ஒரு மினி ஏர் கண்டிஷனர் போல செயல்பட அனுமதிக்கிறது.
இதில் இருக்கும் நன்மைகள் என்ன?
- ஏர் கூலரில் ஐஸ் கட்டி போடுவதால் இருக்கும் நன்மைகள் இதில் முதல் விஷயம் உடனடியாக கூளிங்கை தருகிறது மற்றும் இந்தில் வரும் கூலிங் அதிக நேரம் நீடித்துளைக்கும்.
- இதிலிருக்கும் பாதகங்கள் என பார்த்தால் அடிகடி பரப் போடுவது, மேலும் ஐஸ் கட்டி உருகும்போது தண்ணியாக மாறுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile