Happy Raksha Bandhan : ரக்ஷா பந்தன் அன்பான உறவுக்கு WhatsApp யில் மெசேஜ், Gif மற்றும் ஸ்டிக்கர் வித விதமாக வாழ்த்து
Raksha Bandhan 2025: ரக்ஷா பந்தன் 2025 நாளை, ஆகஸ்ட் 9 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டங்களுடன் அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள உடன் பிறப்புகளிடம் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ்களை உங்கள் அன்ம்பானவர்களுக்கு வித விதமாக அனுப்பி அவர்களை சந்தோஷ படுத்தலாம் மேலும் WhatsApp மூலம் GIF, ஸ்டிக்கர் மற்றும் whatsApp ஸ்டேட்டஸ் போன்றவை எப்படி வைப்பது மேலும் இந்த ஆண்டு எத்தனை மணிக்கு ராக்கி கட்டலாம் என்பதை பார்க்கலாம் வணங்க.
Surveyஇந்த ஆண்டு, ரக்ஷா பந்தன் அல்லது ராக்கி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வருகிறது, ராக்கி கட்டுவதற்கான புனித திதி காலை 5:47 மணி முதல் பிற்பகல் 1:24 மணி வரை நீடிக்கும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்து பண்டிகை சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத மற்றும் விலைமதிப்பற்ற பிணைப்பைக் கௌரவிக்கிறது.
அன்பு தம்பி, அண்ணனுக்கு பெஸ்ட்டான வாழ்த்துக்கள்

- நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், என் ராக்கி உன்னைத் தேடி வரும். ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள், அண்ணா
- ஒரு சகோதரன் என்பவன் இயற்கையால் கொடுக்கப்பட்ட நண்பன். என்னுடையவனாக இருப்பதற்கு நன்றி. எப்போதும் உன்னை நேசிக்கிறேன்.
- “ராக்கி நூல் உங்களுக்கு செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும்.”
- “இந்த ஆண்டு நம் பந்தம் பிரகாசமாக பிரகாசிக்கட்டும். ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.”
- “அன்பால் பிணைக்கப்பட்டு, நினைவுகளால் மூடப்பட்டுள்ளது. ராக்கி வாழ்த்துக்கள்.”
- “என்னுடையது மாதிரி ஒரு அக்கா இருக்கும்போது யாருக்கு சூப்பர் ஹீரோக்கள் தேவை?”

Happy Rakshabandhan 2025 : ஸ்டிக்கர் WhatsApp யில் எப்படி அனுப்புவது ?
- WhatsApp இல் ஸ்டிக்கர்களை அனுப்ப, நீங்கள் முதலில் ஸ்டிக்கர் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.
- -இப்பொழுது ப்ளே ஸ்டோருக்கு சென்று “Happy Raksha Bandhan Stickers” என்று சர்ச் பாரில் தேட வேண்டும்
- அதன் பிறகு, பல ஆப்களுக்கான விருப்பங்கள் தோன்றும், மேலும் அதிக ரேட்டிங்கை கொண்ட ஆப்பை நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
- அதன் பிறகு உங்கள் அன்பு சகோதர, சகோதரிக்கு ,ஸ்டிக்கர்களை அனுப்பலாம்
இதையும் படிங்க:Raksha Bandhan Gift: ரக்ஷா பந்தன் அன்பு பாசமலருக்கு ஸ்பெஷல் GIFT

டவுன்லோட் செய்த ஸ்டிக்கரை WhatsApp யில் எப்படி அனுப்புவது
- முதலில், உங்கள் மொபைல் டிவைசில் WhatsApp ஆப்பை திறக்கவும். அடுத்து, நீங்கள் ஸ்டிக்கரை அனுப்ப விரும்பும் சேட்டை திறக்கவும்.
- சேட் எழுத, நீங்கள் + (பிளஸ்) ஐகானின் விருப்பத்தைப் பெறுவீர்கள், அதில் சேட் உள்ளீட்டுப் பாக்ஸ் செல்ல நீங்கள் தட்ட வேண்டும்.
- இதைச் செய்த பிறகு, நீங்கள் டவுன்லோட் செய்யப்பட்ட ஸ்டிக்கர் ஆப்பை திறந்து வாட்ஸ்அப்பில் இணைக்கலாம்.
- உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட சேட்டுக்கு அனுப்புவதன் மூலம் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை அனுப்பலாம்.
ரக்ஷா பந்தன் GIF அனுப்புவது எப்படி
- ரக்ஷா பந்தன் GIFகளைப் பகிர, உங்கள் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
- இப்போது, ஒரு தனிநபர் அல்லது க்ரூப் சேட்டுக்கு செல்லவும்.
- ஸ்டிக்கர்கள் விருப்பத்தை சொடுக்கி GIF தட்டவும்.
- இதைத் தொடர்ந்து, சர்ச் பாக்சில் ரக்ஷா பந்தன் அல்லது இனிய ரக்ஷா பந்தன் என்று எழுதுங்கள்.
- நீங்கள் பகிர விரும்பும் GIF-ஐத் தேர்ந்தெடுத்து தட்டவும்.
- அனுப்பு என்பதை மீண்டும் தட்டவும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile