இனி Gemini வேண்டாம் Nano Banana,சேலை போட்டோவை WhatsApp யில் உருவாக்கலாம் அது எப்படி

இனி Gemini வேண்டாம் Nano Banana,சேலை போட்டோவை WhatsApp யில் உருவாக்கலாம் அது எப்படி

கூகிளின் Gemini நானோ பனான இப்போதெல்லாம் இண்டேன்ட் முழுவதும் வைரலாகி வந்தது . எல்லோரும் இதைப் பயன்படுத்தி பல்வேறு போட்டோக்களை உருவாக்குகிறார்கள். எல்லோரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். இந்த இமேஜ் ஜெனரேட்டர் மற்றும் எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் சொந்த தனித்துவமான போட்டோவை உருவாக்கலாம். இதுவரை, மக்கள் தங்கள் சொந்த 3D பொம்மை AI போட்டோக்கள் மற்றும் AI சேலை போட்டோக்களை அதன் உதவியுடன் பகிர்ந்துள்ளனர். இப்பொழுது அதே போல Perplexity மூலம் WhatsApp bot மூலம் Nano Banana போட்டோ உருவாக்கலாம், அது எப்படி உருவாக்குவது பற்றிய முழு விவரம் பார்க்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

WhatsApp யில் Nano Banano போட்டோவ உருவாக்குவதை பற்றி ஸ்ரீனிவாஸ் கூறியது என்ன?

கூகிள் ஜெமினியின் நானோ பனான டூல் , பெர்ப்ளெக்ஸிட்டியின் வாட்ஸ்அப் சாட்பாட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் லிங்க்ட்னில் பதிவிட்டுள்ளார். இப்போது, ​​மக்கள் வாட்ஸ்அப் வழியாக நானோ பனான பயன்படுத்தி போட்டோவை எளிதாக உருவாக்க முடியும். ஸ்ரீனிவாஸ் ஒரு சிறிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு பயனர் Perplexity Chatbot ஒரு போட்டோ தன்னை வழுக்கை விழச் செய்யச் சொல்கிறார். பாட் சில நொடிகளில் அறிவுறுத்தலின் படி போட்டோ உருவாக்குகிறது.

இது நானோ பனான பயன்படுத்துவதற்கு ஜெமினி ஆப் தேவையில்லை என்பதையும் குறிக்கிறது. வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி போட்டோவை உருவாக்க முடியும். வாட்ஸ்அப் வழியாக நானோ WhatsApp பயன்படுத்துவது மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும் என்று பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறுகிறார்.

இதையும் படிங்க Amazon VS Flipkart: ஒரே நாளில் விற்பனை எங்கு எந்த பொருட்களில் அதிக ஆபர் தெருஞ்சிகொங்க

WhatsApp யில் Nano Banano போட்டோ உருவாக்குவது எப்படி?

  • வாட்ஸ்அப்பில் நானோ பனான பயன்படுத்த , முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும்.
  • இதற்குப் பிறகு சர்ச் பாக்ஸை தட்டவும்.
  • இப்போது Perplexity Bot யின் நம்பரை உள்ளிடவும், அது +1 (833) 436-3285.
  • அவ்வாறு செய்வதன் மூலம் சர்ச் ரிசல்ட்டில் பாட் உங்களுக்குக் காண்பிக்கப்படும். பாட்டைத் தட்டி சேட்டுக்கு செல்லவும்.
  • இப்போது நீங்கள் சேட்டின் உங்களுக்கு விருப்பமான ஒரு போட்டோவை சேர்க்க வேண்டும், அதனுடன் நீங்கள் மாற்றத்தைக் காண விரும்பும் குறிப்பைக் கொடுக்க வேண்டும்.
  • பின்னர் சிறிது நேரம் காத்திருங்கள், உங்கள் போட்டோ உருவாக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo