WhatsApp (14)
மெட்டாவின் சொந்த பிளாட்பர்மான WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ததுள்ளது, சமிபத்தில் சிறிய பிள்ளைகளும் WhatsApp பயன்படுத்துவதால் தங்கள் பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் அவர்களை கண்காணிக்கவும் இந்த அம்சம் பயனுள்ளதகா இருக்கும், அதாவது இனி வாட்ஸ்அப்பில் அப்பா , அம்மா அல்லது அவர்களின் கவனிப்பாளர் (Guardian) தங்களின் குழைந்தைகளின் அக்கவுண்டை கண்ட்ரோலில் வைக்க முடியும். இந்த அம்சத்தின் நோக்கம், இளைய பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாகும், இதனால் அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் செய்தி அனுப்புதல் மற்றும் அழைப்பைப் பயன்படுத்த முடியும். குடும்பம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த அம்சம் உருவாக்கப்பட்டதாக வாட்ஸ்அப் கூறுகிறது.
இந்த அம்சமானது 13 வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகள் WhatsApp பயன்படுத்துகிறார்கள் அதாவது அவர்கள் தவறான பாதையில் போகாமல் இருக்க இந்த அம்சம் ஆகும் மேலும் இதை பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி , இந்த அம்சத்தின்படி பெற்றோர்கள் தங்கள் போனை குழந்தையின் போனில் இணைக்க வேண்டும். பின்னர் குழந்தையின் அக்கவுன்ட் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும். தெரியாத காண்டேக்டில் இருந்து வரும் மெசேஜ் ரெகுவஸ்ட்களை ஏற்கலாமா வேண்டாமா என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க முடியும். குழந்தையின் அக்கவுண்டில் ப்ரைவசி செட்டிங்களை அவர்களால் நிர்வகிக்க முடியும்.
Parent-Managed Accounts யின் மூலம் சில அம்சங்களை செயலாகாது, மேலும் இது முழுக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தும் நோக்கம் ஆகும். இந்த அக்கவுண்ட்ஸில் Status அப்டேட் Channels மற்றும் Meta AI போன்ற அம்சம் பயன்படுத்த முடியாது இதை தவிர (Disappearing Messages)யின் ஆப்ஷன் மூலம் ஒன் டு ஒன் செட்டை நிறுத்தலாம்.
WhatsApp யின் இந்த புதிய அம்சத்தின் மூலம் தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தால் நேரடியாக Message Request போல்டர் உருவாக்கப்படும், இந்த போல்டரை வெறும் PIN அக்சஸ் இருந்தால் மட்டுமே திறக்க முடியும் இதன் மூலம் குழந்தைகள் எந்த ஒரு தெரியாத நபரிடமும் பேச முடியாது, இதை தவிர எந்த ஒரு நம்பரையும் ப்ளாக் செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு மெசேஜ் சென்றுவிடும்
வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, இந்த அம்சம் படிப்படியாக பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகள் 13 வயதுக்குட்பட்ட (அல்லது நாடு நிர்ணயித்த குறைந்தபட்ச வயது வரம்பிற்குக் குறைவான) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவற்றை அமைக்க பெற்றோர் அல்லது பாதுகாவலர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:LPG சிலிண்டர் உயர்வு மக்கள் பெரும் பாதிப்பு கம்மி விலையில் வரும் இந்த எலக்ட்ரிக் இண்டக்ஷன்பெரும் உதவியாக இருக்கும்