WhatsApp யில் கொண்டு வந்துள்ளது புதிய அம்சம் இனி எல்லாம் அப்பா,அம்மா கண்ட்ரோல் தான்

WhatsApp யில் கொண்டு வந்துள்ளது புதிய அம்சம் இனி எல்லாம் அப்பா,அம்மா கண்ட்ரோல் தான்

மெட்டாவின் சொந்த பிளாட்பர்மான WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்ததுள்ளது, சமிபத்தில் சிறிய பிள்ளைகளும் WhatsApp பயன்படுத்துவதால் தங்கள் பிள்ளைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் அவர்களை கண்காணிக்கவும் இந்த அம்சம் பயனுள்ளதகா இருக்கும், அதாவது இனி வாட்ஸ்அப்பில் அப்பா , அம்மா அல்லது அவர்களின் கவனிப்பாளர் (Guardian) தங்களின் குழைந்தைகளின் அக்கவுண்டை கண்ட்ரோலில் வைக்க முடியும். இந்த அம்சத்தின் நோக்கம், இளைய பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாகும், இதனால் அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் செய்தி அனுப்புதல் மற்றும் அழைப்பைப் பயன்படுத்த முடியும். குடும்பம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்ட பிறகு இந்த அம்சம் உருவாக்கப்பட்டதாக வாட்ஸ்அப் கூறுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த அம்சமானது 13 வயதிற்கும் குறைவாக இருக்கும் குழந்தைகள் WhatsApp பயன்படுத்துகிறார்கள் அதாவது அவர்கள் தவறான பாதையில் போகாமல் இருக்க இந்த அம்சம் ஆகும் மேலும் இதை பற்றி முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

WhatsApp prental அம்சம் என்ன?

வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி , இந்த அம்சத்தின்படி பெற்றோர்கள் தங்கள் போனை குழந்தையின் போனில் இணைக்க வேண்டும். பின்னர் குழந்தையின் அக்கவுன்ட் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும். தெரியாத காண்டேக்டில் இருந்து வரும் மெசேஜ் ரெகுவஸ்ட்களை ஏற்கலாமா வேண்டாமா என்பதை பெற்றோர்கள் தீர்மானிக்க முடியும். குழந்தையின் அக்கவுண்டில் ப்ரைவசி செட்டிங்களை அவர்களால் நிர்வகிக்க முடியும்.

ஒரு சில நிபந்தனைகள் இருக்கும் குழந்தைகளுக்கு

Parent-Managed Accounts யின் மூலம் சில அம்சங்களை செயலாகாது, மேலும் இது முழுக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தும் நோக்கம் ஆகும். இந்த அக்கவுண்ட்ஸில் Status அப்டேட் Channels மற்றும் Meta AI போன்ற அம்சம் பயன்படுத்த முடியாது இதை தவிர (Disappearing Messages)யின் ஆப்ஷன் மூலம் ஒன் டு ஒன் செட்டை நிறுத்தலாம்.

தெரியாத நம்பரில் இருக்கும் மிக பெரிய கண்ட்ரோல்

WhatsApp யின் இந்த புதிய அம்சத்தின் மூலம் தெரியாத நம்பரிலிருந்து கால் வந்தால் நேரடியாக Message Request போல்டர் உருவாக்கப்படும், இந்த போல்டரை வெறும் PIN அக்சஸ் இருந்தால் மட்டுமே திறக்க முடியும் இதன் மூலம் குழந்தைகள் எந்த ஒரு தெரியாத நபரிடமும் பேச முடியாது, இதை தவிர எந்த ஒரு நம்பரையும் ப்ளாக் செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு மெசேஜ் சென்றுவிடும்

வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, இந்த அம்சம் படிப்படியாக பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகள் 13 வயதுக்குட்பட்ட (அல்லது நாடு நிர்ணயித்த குறைந்தபட்ச வயது வரம்பிற்குக் குறைவான) பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அவற்றை அமைக்க பெற்றோர் அல்லது பாதுகாவலர் குறைந்தது 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:LPG சிலிண்டர் உயர்வு மக்கள் பெரும் பாதிப்பு கம்மி விலையில் வரும் இந்த எலக்ட்ரிக் இண்டக்ஷன்பெரும் உதவியாக இருக்கும்

Parent Managed அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

  • உங்கள் குழந்தையின் போனில் கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப்பைப் இன்ஸ்டால் செய்யவும் .
  • ஆப்பை திறந்து ‘Agree and Continue என்பதைத் தட்டவும்.
  • More Options என்பதன் கீழ்,Create a Parent Managed Account உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் குழந்தையின் போன் நம்பரை உள்ளிட்டு அதைச் சரிபார்க்கவும்.
  • குழந்தையின் பிறந்த தேதியை உள்ளிட்டு வயதைக் கண்டறியவும்.
  • இப்போது ‘தொடரவும்’ என்பதைத் தட்டுவதன் மூலம் கணக்கை பெற்றோரின் தொலைபேசியுடன் இணைக்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo