Motorola பிரியர்களுக்காக Motorola 70 Fusion கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது இந்த போன் இன்று பிளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக இந்த போனை வெறும் ரூ,24,999க்கு வாங்களாம் மேலும் இந்த போனில் அதிகபட்சமாக 7000Mah வரையிலான பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் விலை மற்றும் டிஸ்கவுண்ட் மற்றும் அம்சங்களை பார்க்கலாம் வாங்க.
Motorola Edge 70 Fusion 8 ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ,26,999, 8 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிர்க்கு ரூ,29,999 மற்றும் டாப்-எண்ட் 12 ஜிபி ரேம்/256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ,32,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனை பிளிப்கர்டில் இன்று 12 மணிக்கு விறபனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக HDFC பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் ரூ,2000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் அல்லது ரூ,2,000 பிளாட் எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது மேலும் இந்த போனை இதன் மூலம் இந்த போனின் விலைகள் முறையே ரூ,24,999, ரூ,,27,999 மற்றும் ரூ, 30,999க்கு வாங்கலாம் மேலும் இதன் பல ஆபர் நன்மையை பற்றி அதன் அதிகாரபூர்வ Flipkart வெப்சைட்டை பார்க்கலாம்.
இதையும் படிங்க சத்தமில்லாமல் Xiaomi அதன் இரண்டு போனை அறிமுகம் செய்தது ஆனால் விலை பார்த்த தலை சுத்திவிடும்
Motorola Edge 70 Fusion 6.78-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளேவை 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 5,200 நிட்களின் உச்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ஸ்க்ரீன் HDR10+ சப்போர்ட் 10-பிட் கலர் வருகிறது, மேலும் டிஸ்ப்ளே கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது. நீடித்து உழைக்கும் முன்பக்கத்தில், எட்ஜ் 70 ஃப்யூஷன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டுள்ளது. இது MIL-STD-810H மிலிட்டரி க்ரேட் சர்டிபிகேஷன் 16 டெஸ்ட்டிங் தேர்ச்சி பெறுகிறது.
ப்ரோசெசர் பற்றி பேசினால், எட்ஜ் 70 ஃப்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UI யில் இயங்குகிறது , இது 3 OS அப்டேட்களுக்கு மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது.
கேமரா பற்றி பேசுகையில் எட்ஜ் 70 ஃபியூஷன்,இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 50MP சோனி LYTIA 710 பிரைமரி ஷூட்டர் மற்றும் மேலும் 120 டிகிரி பார்வை புலத்துடன் கூடிய 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இதில் மேக்ரோ லென்ஸ் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஷூட்டர் உள்ளது. பின்புறம் மற்றும் செல்ஃபி ஷூட்டர்களில் இருந்து 4K 30fps வீடியோ ரெக்கர்டிங்க்க்கான சப்போர்டுடன் இந்த போன் வருகிறது.
இந்த போனில் ஒரு பெரிய 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் நிரம்பியுள்ளது மற்றும் 68W டர்போபவர் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.