WhatsApp யில் வருகிறது விளம்பர அம்சம் ஆனா இவர்களுக்கு மட்டும்தான் உங்களை நோ டிஸ்டர்ப் முழு விவரம் பாருங்க
WhatsApp அதன் பயனர்களுக்கு பல புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறது
சேட் ஆப்யில் விளம்பரங்களைக் காட்ட WhatsApp தொடங்க உள்ளது
WhatsApp யின் மூன்று புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது பிஸ்னஸ் மற்றும் கிரியேட்டர்க்கு இது பயன்படும்
WhatsApp அதன் பயனர்களுக்கு பல புதிய புதிய அப்டேட்களை தொடர்ந்து கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அதாவது WhatsApp 1.5 பில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள், பல ஆண்டுகளாக எந்த நிபந்தனைகளும் இல்லாமல் இலவச சேவையை வழங்கிய பிறகு, சேட் ஆப்யில் விளம்பரங்களைக் காட்ட WhatsApp தொடங்க உள்ளது. Instagram யின் ஸ்டோரி போலவே, பயனர்கள் விளம்பரங்களை ஸ்டேட்டஸ் ஸ்க்ரீனில் மட்டுமே பார்ப்பார்கள் என்பது தெளிவாகிறது. எனவே Instagram யில் சில ஸ்டோரியை பார்த்த பிறகு விளம்பரங்களைப் பார்ப்பது போல, WhatsApp யில் சில ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ்கலை பார்த்த பிறகு விளம்பரங்களைக் காண்பீர்கள். அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
SurveyWhatsApp யின் மூன்று புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது மேலும் இது பிஸ்னஸ் மற்றும் கிரியேட்டர்க்கு இது பயன்படும்
Channel subscriptions: மாதந்திர கட்டணத்தில் எக்ஸ்க்ளுசிவ் அப்டேட்
- Channel subscriptions:பயனர்கள் இப்போது மாதாந்திர கட்டணத்திற்கு சந்தா செலுத்துவதன் மூலம் தங்களுக்குப் பிடித்த சேனல்களை சப்போர்ட் செய்ய முடியும். அதற்கு ஈடாக, சந்தாதாரர்கள் பிரத்யேக அப்டேட்களுக்காக அக்சஸ் பெறுவார்கள். இந்த நடவடிக்கை க்ரியேட்டர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வாட்ஸ்அப்பிற்குள்ளேயே ஒரு விசுவாசமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்க உதவும்.
- Promoted Channels WhatsApp பயனர்கள் புதிய கன்டென்ட் கண்டறிய உதவும் வகையில், வாட்ஸ்அப் இப்போது விளம்பரப்படுத்தப்பட்ட சேனல்களைக் directory காட்டத் தொடங்கும். இது சேனல் அட்மிங்களின் வியுவ்ஸ் அதிகரிக்கவும், அதிகமான போலோவர்களை சென்றடையவும் ஒரு வழியை வழங்குகிறது.
- Ads in Status: வாட்ஸ்அப் இப்போது ஸ்டேட்டஸ் பிரிவில் விளம்பரங்களைக் காண்பிக்கும். இந்த விளம்பரங்கள் தங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தும் பிஸ்னஸ்களிலிருந்து வரும். பயனர்கள் பிஸ்னஸ் உடன் நேரடியாக கான்வேர்செசன் தொடங்க விளம்பரத்தைத் தட்டலாம். ஆனால் இங்கே முக்கியமான ஒன்று உள்ளது – நீங்கள் ஸ்டேட்டஸ் அம்சத்தைப் பயன்படுத்தாவிட்டால், இந்த விளம்பரங்களை நீங்கள் பார்க்கவே மாட்டீர்கள்.
இந்த புதிய அம்சமானது அப்டேட் டேப் என்ற பகுதியில் மட்டும் தோன்றும் ஆனால், நீங்கள் தனிப்பட்ட சேட் அல்லது உங்களின் அன்புக்குரியவர்களிடம் பேசி கொண்டிருந்தால் உங்களை எந்த இடயுரும் இருக்காது அதாவது எப்பொழுதும் போல சாதரணமாக சேட் செய்யலாம்.
இதையும் படிங்க: IRCTC ஜூலை 1 முதல் புதிய விதி Aadhaar card உடன் IRCTC அக்கவுண்ட் லிங்க் செய்யாவிட்டால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியாது
Ads ப்ரவசியை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது
WhatsApp இதில் தெரிவிப்பது என்னவென்றால் இந்த Ad அம்சத்தால் எந்த ஒரு பாதிப்பு இருக்காது உங்களின் கால்,மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் போன்றவை end-to-end encrypted ஆக இருக்கும் அதாவது இதை யாராலும் பார்க்க முடியாது எங்களையும் உட்பட என WhatsApp கூறியுள்ளது.
உங்கள் போன் நம்பர் விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று நிறுவனம் கூறுகிறது. தொடர்புடைய விளம்பரங்களைக் காட்ட, WhatsApp உங்கள் நாடு, மொழி, பின்பற்றப்படும் சேனல்கள் மற்றும் விளம்பர தொடர்புகள் போன்ற லிமிடெட் தகவல்களை மட்டுமே பயன்படுத்தும். அக்கவுன்ட் சென்டர் மூலம் உங்கள் Meta அக்கவுன்ட் உடன் WhatsApp-ஐ இணைத்திருந்தால், Facebook மற்றும் Instagram போன்ற பிற ஆப் களிலிருந்து உங்கள் விளம்பர விருப்பங்களையும் Meta பயன்படுத்தலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile