ஜியோ போனுக்கு கடும் தரக்கூடிய Realme Dizo அறிமுகம்

ஜியோ போனுக்கு கடும் தரக்கூடிய Realme Dizo அறிமுகம்
HIGHLIGHTS

Dizo தனது முதல் பீச்சர் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Dizo ஒரே நேரத்தில் Dizo ஸ்டார் 500 மற்றும் Dizo ஸ்டார் 300 ஆகிய இரண்டு பீச்சர் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த இரண்டு போன்களிலும் 2 ஜி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது

ரியல்மீ இந்தியாவின் துணை பிராண்ட் Dizo தனது முதல் பீச்சர்  போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Dizo ஒரே நேரத்தில் Dizo ஸ்டார் 500 மற்றும் Dizo ஸ்டார் 300 ஆகிய இரண்டு பீச்சர் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு பீச்சர் போன்களும்  டி 9 கீபேட், டார்ச் மற்றும் அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆதரவைப் கொடுக்கும் , இருப்பினும் டிஸோவின் இந்த இரண்டு போன்களிலும் 2 ஜி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது, எனவே அவை ஜியோ போனுடன் போட்டியிடாது.
 
டிசோ ஸ்டார் 300 அம்சங்கள்

– 1.77 இன்ச் 160×120 பிக்சல் QQVGA LCD ஸ்கிரீன்
– 26MHz SC6531E பிராசஸர் 
– 32MB ரேம்
– 32MB மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட் 
– 0.08 எம்பி பிரைமரி கேமரா 
– 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்பி3 பிளேயர் 
– 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
– 2550 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

டிசோ ஸ்டார் 500 அம்சங்கள்

– 2.8 இன்ச் 320×240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
– 26MHz SC6531E பிராசஸர்
– 32MB ரேம், 32MB மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
– டூயல் சிம் ஸ்லாட் 
– 0.3 எம்பி பிரைமரி கேமரா
– ஸ்ட்ரிப் டார்ச் 
– 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, எம்.பி. 3 பிளேயர் 
– 2ஜி GSM 900/1800, ப்ளூடூத் 2.1, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் 
– 1900 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

புதிய 2ஜி மொபைல் போன் மாடல்களில் Spreadtrum SC6531E பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் QQVGA மற்றும் QVGA ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிரைமரி கேமரா, ஆங்கிலம் உள்பட தமிழ், இந்தி, குஜராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கும் வசதி உள்ளன. 

விலை தகவல்.

டிசோ ஸ்டார் 300 மாடல் பிளாக், புளூ மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 ஆகும். டிசோ ஸ்டார் 500 மாடல் பிளாக், கிரீன் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,799 ஆகும். இவற்றின் விற்பனை ஜூலை 8 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo