ரூ,39,999 ஆரம்ப விலையில் OnePlus யின் புதிய டிவி அறிமுகம்.

HIGHLIGHTS

OnePlus TV U1s இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் டிவி U1s 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

OnePlus TV U1s மெட்டல்-பேக் டிசைன் மற்றும் பேசில் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது

ரூ,39,999 ஆரம்ப விலையில் OnePlus  யின் புதிய டிவி அறிமுகம்.

OnePlus TV U1s  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் நிறுவனம் தனது புதிய  OnePlus Nord CE 5G மாறுபாட்டையும் வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் டிவி U1s 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இது மெட்டல்-பேக் டிசைன் மற்றும் பேசில் லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஒரு மெட்டல் ஸ்டாண்ட் தொலைக்காட்சியுடன் கிடைக்கிறது. டேட்டா சேவர் அம்சங்கள் மற்றும் பெற்றோரின் கட்டுப்பாடுகளுடன் டிவி தொடங்கப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஒன்பிளஸ் டிவி U1S அம்சங்கள்

– 50 / 55 / 65-இன்ச் 3840×2160 4K LED பேனல், டால்பி விஷன், HDR10, HDR10+,HLG
– காமா என்ஜின் மற்றும் MEMC, சூப்பர் ரெசல்யூஷன், நாய்ஸ் டிக்ஷன்
– கலர் ஸ்பேஸ் மேப்பிங், டைனமிக் காண்டிராஸ்ட், AI-PQ
– ஆண்ட்ராய்டு டிவி 10 மற்றும் ஆக்சிஜன்பிளே 2.0
– பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட்
– வைபை, ப்ளூடூத் 5.0 LE, 3x HDMI, 2x USB, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
– 30W ஸ்பீக்கர், DTS-HD, டால்பி ஆடியோ

புதிய U1S ஸ்மார்ட் டிவி 50-இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இவை அனைத்தும் 4K திறன் கொண்டிருக்கின்றன.

பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கள் 95% அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, HDR10, HLG, HDR 10+ போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. 

 ஒன்பிளஸ் டிவி கேமரா 

ஒன்பிளஸ் டிவி U1S மாடலுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக ஒன்பிளஸ் டிவி கேமராவையும் அறிமுகம் செய்தது. இது வைடு ஆங்கில் வீடியோ, 1080 பிக்சல் தர புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இதில் டூயல் மைக்ரோபோன்கள், நாய்ஸ் கேன்சலேஷன் அல்காரிதம்களுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஒன்பிளஸ் டிவி கேமரா விலை ரூ. 2499 ஆகும்.

இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் டிவி U1S 50 இன்ச் விலை ரூ. 39,999, 55 இன்ச் விலை ரூ. 47,999 மற்றும் 65 இன்ச் விலை ரூ. 62,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் நடைபெறுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo