Xiaomi Mi QLED TV 4K இந்தியாவில் அறிமுகமானது, விலை தகவல் இங்கே தெரிஞ்சிக்கோங்க.

HIGHLIGHTS

Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து உள்ளது.

Mi QLED TV 4K திய 4K டிவி டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், ஹைப்ரிட் லாங்-காமா சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Xiaomi Mi QLED TV 4K இந்தியாவில்  அறிமுகமானது, விலை தகவல்  இங்கே தெரிஞ்சிக்கோங்க.

சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi QLED TV 4K ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 4K டிவி டால்பி விஷன், ஹெச்டிஆர் 10 பிளஸ், ஹைப்ரிட் லாங்-காமா சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக துல்லியமான நிறங்களை பிரதிபலிக்கிறது. இதனால் அதிக திறன் கொண்ட விளையாட்டு நிகழ்வுகள், கேமிங் மற்றும் இதர தரவுகளை சீராக ரென்டர் செய்ய முடியும். இதற்கென இந்த டிவியில் MEMC சிப் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இதில் HDMI 2.1  மற்றும் eARC வழங்கப்பட்டு உள்ளது. இது அதிக பேண்ட்வித் ஆடியோ, ஆட்டோமேடிக் லோ லேடென்சி மற்றும் 5ms இன்புட் லேக் கொண்டிருக்கிறது. இதனால் கேமிங் அனுபவம் தலைசிறந்ததாக இருக்கும். இந்த டிவியில் 30 வாட் திறன் கொண்ட 6 ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் புதிய சியோமி டிவி மிக மெல்லிய பெசல்கள், 96 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது. இத்துடன் அலுமினியம் அலாய் பிரேம், சேண்ட் பிளாஸ்ட் கோட்டிங் மற்றும் கார்பன் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த டிவி மாடலில் ஆண்ட்ராய்டு 10, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்கேஸ்ட் பில்ட் இன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சந்தையில் சியோமி  Mi QLED TV 4K 55 இன்ச் மாடல் விலை ரூ. 54,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo