Nokia 5.3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
புதிய Nokia 5.3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்
நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது
HMD குளோபல் நிறுவனம் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். முன்னதாக இதே ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
Never miss out on capturing your favourite moments with the Nokia 5.3 #Nokia5dot3 pic.twitter.com/Rt2TtiA68s
— Nokia Mobile India (@NokiamobileIN) August 18, 2020
நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்
– 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
– 13 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி இரண்டாவது சென்சார்
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி
– ப்ளூடூத், வைபை
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– எஃப்எம் ரேடியோ
புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சார்கோல், சியான் மற்றும் சேன்ட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. நோக்கியா 5.3 இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. எனினும், இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile