Aarogya Setu கொரோனா வைரஸ் தகவலை வழங்கும் ஆப் அதிக டவுன்லோட் பெற்றுள்ளது.

HIGHLIGHTS

டவுன்லோடுகளின் எண்ணிக்கை 7.5 கோடியாக அதிகரித்துள்ளது.

Aarogya Setu கொரோனா வைரஸ் தகவலை வழங்கும் ஆப் அதிக டவுன்லோட் பெற்றுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவல் இடங்களை கண்டறிய ஏதுவாக மத்திய அரசு சார்பில் ஆரோக்கியசேது எனும் செயலி உருவாக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் தங்கள் பகுதியில் கொரோனா தொற்று உள்ள நபர்கள், அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஏப்ரல் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்யசேது செயலி அன்று முதல் அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கும் ஆரோக்யசேது செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் டவுன்லோட்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. 

இந்த செயலி ப்ளூடூத் மற்றும் ஜி.பி.எஸ். மூலம் உருவாக்கப்பட்ட சமூக வரைபடம் கொண்டு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டவருடன் மக்கள் தொடர்பு கொள்கிறார்களா என்பதை கண்டறியும். ஆரோக்கிய சேது செயலி வெளியானது முதல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செயலி வெளியான 13 நாட்களில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்திருந்த நிலையில், தற்சமயம் டவுன்லோடுகளின் எண்ணிக்கை 7.5 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த செயலியை பொதுமக்கள் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்துடன் செயலியை மக்களிடம் கொண்டு சேர்க்க தேவையான அளவு விளம்பரம் செய்யவும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

பயனர்களுக்கு அருகில் கொரோனா தொற்று உள்ள இடங்கள் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிக்கான எச்சரிக்கையினை உடனுக்குடன் தெரிவிக்கும். மத்திய அரசின் ஆரோக்யசேது செயலியானது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo