Pixel 4A ஸ்னாப்ட்ரகன் 730 ப்ரோசெசருடன் உருவாகிறது.

Pixel 4A ஸ்னாப்ட்ரகன் 730 ப்ரோசெசருடன் உருவாகிறது.
HIGHLIGHTS

புதிய மாடலில் பன்ச் ஹோல் OLED டிஸ்ப்ளே, பின்புற கைரேகை சென்சார்,

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் ரென்டர்கள் கடந்த ஆண்டு வெளியானது. இதைத் தொடர்ந்து பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகி, அந்த வரிசையில் தற்சமயம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம், ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

புதிய மாடலில் பன்ச் ஹோல் OLED டிஸ்ப்ளே, பின்புற கைரேகை சென்சார், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல், மெல்லிய பெசல் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதை தெரியப்படுத்தியது. 

கூகுள் Pixel 4A எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+OLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
– அட்ரினோ 618 GPU, டைட்டன் எம் செக்யூரிட்டி சிப்
– 6 ஜிபி ரேம்
– 64 / 128 ஜிபி மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் பிடி ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS
– 8 எம்பி செல்ஃபி கேமரா, 84 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்
– டூயல் சிம்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யுஎஸ்பி டைப்-சி
– 3080 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் மற்றும் பார்லி புளூ நிறங்களில் வெளியாகும் என்றும் இதன் துவக்க விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30,280 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo