ரெட்மி 48MP கேமராவுடன் உடன் உருவாக்குகிறது அசத்தலான ஸ்மார்ட்போன் ..!

HIGHLIGHTS

சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

ரெட்மி  48MP கேமராவுடன்   உடன் உருவாக்குகிறது  அசத்தலான ஸ்மார்ட்போன் ..!

சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரெட்மி சீரிசில் அறிமுகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீன வெப்சைட்டில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் M1901F7C, M1901F7T மற்றும் M1901F7E மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் வாட்டர்டிராப் நாட்ச் கொண்ட ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், பின்புறம் பிங்கர்ப்ரிண்ட்  சென்சார் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் ரெட்மி பை சியோமி பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் போகோ போன்று ரெட்மி தனி பிராண்டாக இருக்கும் என தெரிகிறது. பின்புறம் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனில், ஒரு கேமராவில் 48 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் 4000 Mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

ரெட்மி ஸ்மார்ட்போனில் சோனியின் IMX586 1/2-டைப் (8.0 எம்.எம். டயகோனல்) சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். பிராசஸர் கொண்டிருக்கும். இதனை சியோமி ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 7 என அழைக்கப்படலாம்.

புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo