3D தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியான 2.0 மூவி அசத்தல் அம்சங்கள்

HIGHLIGHTS

.0 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 2010ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது.

3D தொழில்நுட்பத்தில் தயாராகி வெளியான 2.0 மூவி அசத்தல் அம்சங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 2010ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை, ‘லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துப் படம் வெளியாகி விட்டது.

படத்தில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். இந்திய சினிமாவின் costliest மூவி என விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 500 கோடி பொருட்செலவில் 3Dதொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.

பறவைகளின் காதலன் அக்க்ஷய் வளர்க்கும் பறவைகள் Cell Phone Tower Radiation காரணமாக இறக்கின்றன.

அக்க்ஷய் கொடுக்கும் புகார்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்யும் அக்க்ஷய், அதிகச் சக்தி கொண்ட நபராக (ஆன்மாவாக – Fifth Force) மாறுகிறார்.

செல்போன் பயன்படுத்துபவர்களை அனைவரையும் கொல்ல முடிவு செய்கிறார். இவரிடமிருந்து எப்படி விஞ்ஞானி வசீகரன், சிட்டி உதவியால் மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை. Humanoid Robot ஆக வரும் எமி அசத்தலான நடிப்பு.

யார் செல்போனை தூக்குகிறார்கள், எப்படி மறைந்து போகிறது என்று அனைவரும் குழம்பும் போது, அக்க்ஷை ஒவ்வொருத்தராகப் பழி வாங்குவது பகீர் ரகம்.

தியேட்டர் முழுக்கச் செல்போன்கள் குவிந்து Vibrator சத்தத்துக்குத் சினிமா தியேட்டரே அதிர்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo