Asus நிறுவனத்தின் பிரமாண்டமான ROG கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

HIGHLIGHTS

அசுஸ் (ROG) போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அசுஸ் நிறுவனத்தின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் ஆகும்.

Asus நிறுவனத்தின் பிரமாண்டமான ROG கேமிங்  ஸ்மார்ட்போன்  அறிமுகம்

புதிய அசுஸ் ROGபோனில் 6.00 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED HDR டிஸ்ப்ளே, கேமிங் ஹெச்.டி.ஆர்., மொபைல் ஹெச்.டி.ஆர். உள்ளிட்டவை ஸ்னாப்டிராகன் 845 உதவியுடன் பிரத்யேக டிஸ்ப்ளே சிப் மூலம் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் அசுஸ் ரோக் போனில் கேம்கூல் சிஸ்டம் மூலம் ஸ்மார்ட்போனின் வெப்பம் குறைக்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பிரத்யேக அல்ட்ராசோனிக் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது புறம் மற்ரும் இடது புறங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவை லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்டிரெயிட் மோட்களுக்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்டன்களை ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பட்டன்களை கேமிங் அல்லாத அம்சங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். கேம்களில் ஃபோர்ஸ் ஃபீட்பேக் அம்சத்திற்கென அதிர்வுகளை வழங்க அதிநவீன ஹேப்டிக் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் வைஜிக் சான்று பெற்ற 802.11ad 60GHz வைபை, 2×2 MIMO மற்றும் வைபை டைரக்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் போர்ட்டில் ஜிகாபிட் ஈத்தர்நெட் வசதியை சப்போர்ட் செய்யும். பயனர்கள் இதனை யு.எஸ்.பி. டைப்-சி வழியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றுடன் ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் ROG போன் சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெதச்.டி.+ 18:9 90Hz, AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– கேமிங் ஹெச்.டி.ஆர். மற்றும் மொபைல் ஹெச்.டி.ஆர்.
– 2.96 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ரோக் கேமிங் X மோட் யு.ஐ.
– டூயல் சிம்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 1.4µm பிக்சல், 1/2.55″ சோனி IMX363 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
– இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– முன்பக்கம் டூயல் 5-மேக்னெட் ஸ்பீக்கர், டூயல் NXP 9874 ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், ஹை-ரெஸ் ஆடியோ, டி.டி.எஸ். 
– வாட்டர் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000Mah . பேட்டரி

அசுஸ் ரோக் போன் 4000 mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு 30 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன் 0-60% சார்ஜ் ஆக 33 நிமிடங்களும், 85% வரையிலான சார்ஜ் ஆக ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும். ஸ்மார்ட்போனின் பின்புறம் இடம்பெற்று இருக்கும் லோகோ நீங்கள் தேர்வு செய்யும் நிறத்தில் பல்வேறு வகைகளில் மிளரச் செய்யும். 

புதிய அசுஸ் ROG போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் அசுஸ் ரோக் போன் விலை ரூ.69,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனினை பயனர்கள் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியில் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo