மூன்று கேமராக்களுடன் Samsung Galaxy A7 (2018) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்…!

HIGHLIGHTS

கேலக்ஸி A7 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் HD பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று கேமராக்களுடன் Samsung Galaxy A7 (2018)  ஸ்மார்ட்போன்  இந்தியாவில் அறிமுகம்…!

சாம்சங் நிறுவனம் Galaxy A7  இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது. 24 எம்.பி. பிரைமரி சென்சார், f/1.7 அப்ரேச்சர், 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 120 டிகிரி வைடு லென்ஸ், 5 எம்.பி. மூன்றாவது கேமரா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 24 எம்.பி. கேமரா, LED . ஃபிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது . 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் செல்ஃபி ஃபோக்கஸ், ப்ரோ லைட்டிங் மோட் மற்றும் ஏ.ஆர். எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி A7 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் HD  பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1080×2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7885 14nm பிராசஸர்
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
– 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
– 5 எம்.பி. மூன்றாவது கேமரா, f/2.2, டெப்த் கேமரா
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– பக்கவாட்டில் பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– டால்பி அட்மோஸ்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3300 Mah. பேட்டரி
– அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் Galaxy A7  (2018) ஸ்மார்ட்போன் புளு, பிளாக், கோல்டு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,990 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சாம்சங் Galaxy A7  (2018) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வெப்சைட்டில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஆன்லைன் விற்பனை செப்டம்பர் 26 மற்றும் 27 அன்று விற்பனை துவங்க இருக்கும் நிலையில், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் செப்டம்பர் 29-ம் தேதி விற்பனை செய்யப்பட இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo