சாம்சங் கேலக்ஸி S Lite லக்சரி எடிஷன் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யபட்டது

சாம்சங் கேலக்ஸி S Lite லக்சரி எடிஷன் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யபட்டது
HIGHLIGHTS

இந்த போனில் போட்டோ எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இரண்டு கேமராக்களிலும் f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S லைட் லக்சரி எடிஷன் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

போட்டோ எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் இரண்டு கேமராக்களிலும் f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குகிறது மற்றும் சாம்சங்-இன் எக்ஸ்பீரியன்ஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி Sலைட் லக்சரி எடிஷன் ஸ்மார்ட்போனில் மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டுள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 3000 mah  பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது . இத்துடன் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.  

சாம்சங் கேலக்ஸி எஸ் லைட் லக்சரி எடிஷன் சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் FHD பிளஸ் 2220×1080 பிக்சல் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7, 1.12um பிக்சல், OIS
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.7
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– கைரேகை சென்சார், கைரோ சென்சார், பிராக்சிமிட்டி சென்சார், ஐரிஸ் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி
– 3000 எம்ஏஹெச் பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி Sலைட் லக்சரி எடிஷன் ல்மார்ட்போன் பிளாக் மற்றும் பர்கன்டி ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை குறுகிய காலகட்டத்திற்கு சீனாவில் 3699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.39,410) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜூன் 1-ம் தேதி முதல் துவங்குகிறது. பின் இதன் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo