OnePlus 6 Marvel Avengers Limited Edition வெளியீட்டு தேதி மற்றும் வீடியோ டீசர் லீக் ஆகியுள்ளது

HIGHLIGHTS

இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்விலேயே ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.

OnePlus 6 Marvel Avengers Limited Edition  வெளியீட்டு தேதி மற்றும் வீடியோ டீசர் லீக் ஆகியுள்ளது

Avengers பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்க ஒன்பிளஸ் மார்வெல் ஸ்டூடியோஸ் உடனான ஒப்பந்தத்தை கடந்த வாரம் அறிவித்தது. அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ஒன்பிளஸ் 6 அவென்ஜர்ஸ் எடிஷன் மே 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதே நிகழ்வில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் வெளியான சில மாதங்களில் ஒன்பிளஸ் 5T ஸ்டார் வார்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் டிஸ்னியுடன் ஒப்பந்தமிட்டிருந்தது.

புதிய அறிவிப்புடன் ஒன்பிளஸ் 6 மார்வெல் அவென்ஜர்ஸ் லிமிட்டெட் எடிஷன், 19:9 ரரக டிஸ்ப்ளே, பிரத்யேக டெக்ஸ்ச்சர் கொண்ட பின்புறம் கொண்ட ஸ்மார்ட்போனின் டீசரை ஒன்பிளஸ் வெளியிட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்தில் இருந்து எடிக்கப்பட்ட வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கும் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படத்திற்கான டிக்கெட்களை இலவசமாக வழங்கியது. ஏப்ரல் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளில் வாடிக்கையாளர்கள் வசிக்கும் நகரங்களில், விரும்பும் தேதியில் திரைப்படத்திற்கான டிக்கெட்களை ஒன்பிளஸ் வலைத்தளத்தில் பெற முடியும் என அறிவித்தது. 

இந்தியாவில் மே 170ம் தேதி ஒன்பிளஸ் 6 வெளியாக இருக்கிறது. அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனினை மே 21-ம் தேதி 12.00 மணி முதல் பிரத்யேகமாக வாங்கிட முடியும். ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.999 கட்டணம் செலுத்தி கலந்து கொள்ள முடியும்.

அறிமுக விழாவுக்கான அனுமதி சீட்டுகளை வாடிக்கையாளர்கள் மே 8-ம் தேதி காலை 10.00 மணி முதல் பெற முடியும். விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களுக்கும் ஒன்பிளஸ் டோட் பேக், பரிசு கூப்பன், மார்வெல் அவென்ஜர்ஸ் தொப்பி, மார்வெல் அவென்ஜர்ஸ் டீ-சர்ட், ஒன்பிளஸ் நோட்புக், கேஷ் கேனான், ரூ.999 மதிப்புடைய ஒன்பிளஸ் வவுச்சர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo