ஐபோன் X-இல் இதெல்லாம் இருக்கா? கேலக்ஸி எஸ்9

ஐபோன் X-இல் இதெல்லாம் இருக்கா? கேலக்ஸி எஸ்9
HIGHLIGHTS

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. இவற்றில் வழங்கப்பட்டு ஐபோன் X-இல் இல்லாத சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வேரியபிள் அப்ரேச்சர் என்ற ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் புகைப்படம் எடுக்கப்படும் சூழலின் வெளிச்சத்திற்கு ஏற்ப அப்ரேச்சர் அளவினை f/1.5 இல் f/2.4 வரை மாற்றிக் கொள்ளும். ஐபோன் X ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அனிமோஜி ஆப்ஷன் ஆப்பிளின் ஐபோன் X மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 3D எமோஜிக்களை சார்ந்து உருவாகி இருந்தாலும், ஐபோனை விட புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் பிரீசெட் ஒன்றில் முகத்தை காண்பித்து எமோஜிக்களை உருவாக்காமல், புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த எமோஜிக்களை உருவாக்க முடியும். ஸ்கின் டோன், தலைமுடி நிறம், ஆடை நிறம் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்வது என பல்வேறு ஆப்ஷன் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர் அம்சம் புதிய கேலக்ஸி எஸ்9 சீரிஸ்-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் X போன்று இல்லாமல் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்களில் இருபுறமும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஸ்மார்ட்போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாக இருந்த 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் ஐபோன் மாடல்களில் நீக்கப்பட்டு விட்டது. எனினும் சாம்சங் ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் இன்னமும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்றளவும் பெரும்பாலானோர் 3.5 எம்.எம் ஜாக் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகில் தற்சமயம் வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் ஐடி அல்லது ஃபேஸ் அன்லாக் தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஐபோன் X ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் நீக்கப்பட்டு பாதுகாப்பிற்கு முற்றிலும் ஃபேஸ் ஐடி அம்சத்தை நம்ப வேண்டியுள்ளது. கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ் அன்லாக், ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் கைரேகை சென்சார் என வெவ்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் பாதுகாப்பு அம்சத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் கேமராவின் கீழ் வைக்கப்பட்டிருப்பதால் மிக வேகமாகவும், எளிமையாகவும் பயன்படுத்த முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

 
Digit.in
Logo
Digit.in
Logo