நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூபாய்.2000 கேஷ்பேக் – ஏர்டெலின் அதிரடி ஆபர்.

HIGHLIGHTS

ஏர்டெல் நிறுவனம் HMT குளோபல் நிறுவனத்துடன் இணைந்து நோக்கியா ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூபாய்.2000 வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.

நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு ரூபாய்.2000 கேஷ்பேக் – ஏர்டெலின் அதிரடி ஆபர்.

ஏர்டெல்-இன் மேரா பேளா ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு சலுகைகளை வழங்க பாரதி ஏர்டெல் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த திட்டத்தின் கீழ் நோக்கியா 2 மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ஏர்டெல் சார்பில் ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஏர்டெல் ரூ.169 சலுகையுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.169 சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

நோக்கியா 2 மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போன் வாங்குவோர் முதற்கட்டமாக முறையே ரூ.6,999 மற்றும் ரூ.9,499 செலுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து 36 மாதங்கள் தொடர்ச்சியாக ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது முதல் 18 மாதங்கள் நிறைவுறும் போது ரூ.500 மற்றும் 36 மாதங்கள் நிறைவுறும் போது ரூ.1,500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

நோக்கியா 2 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் எச்டி LTPS  LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 212 சிப்செட்
– அட்ரினோ 304 GPU
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP52)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4100 எம்ஏஎச் பேட்டரி

புதிய நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் பாலிகார்பனைட் பேக் கொண்டிருக்கிறது. IP 52 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் காப்பர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

நோக்கியா 3 சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 1280×720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
– 2650 எம்ஏஎச் பேட்டரி

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo