வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது
தற்போது பயனர்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிறப்பம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப்பில் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவற்றின் பிரைவசி ஆப்சனில் My contacts except.. என்கிற புதிய அம்சம் தான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
சமூக வலைதளமான வாட்ஸ்அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பின்னர், அதில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது. பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பல்வேறு அப்டேட்டுகளை வழங்கி வரும் அந்நிறுவனம் தற்போது பயனர்கள் ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிறப்பம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
அது என்னவென்றால், வாட்ஸ்அப்பில் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவற்றின் பிரைவசி ஆப்சனில் My contacts except.. என்கிற புதிய அம்சம் தான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டின் புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் மற்றும் நீங்கள் பதிவிடும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை அனைவரும் பார்க்கலாம், காண்டாக்டில் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், யாரும் பார்க்கக்கூடாது என்கிற 3 ஆப்சன்கள் மட்டுமே இருந்தது.
ஆனால் தற்போது சேர்க்கப்பட்டுள்ள மை காண்டாக்ட் எக்சப்ட் என்கிற அம்சம் மூலம் உங்கள் காண்டாக்ட்டில் இருப்பவர்களில் யாருக்கெல்லாம் உங்களது ஸ்டேட்டஸ், புரபைல் போட்டோ, லாஸ்ட் சீன் ஆகியவை காட்டப்பட வேண்டும் என்பதை உங்களால் தேர்ந்தெடுக்க முடியும். விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, வாட்ஸ்அப் க்ரூப் கால்களுக்கான பல அம்சங்களை வெளியிடுவதாக அறிவித்தது. இந்த செயலியானது குறிப்பிட்ட நபர்களை அழைப்பின் போது ம்யூட் செய்ய பயனர்களை அனுமதிக்கும். இருப்பினும், ஒலியடக்கும் உரிமை பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா அல்லது க்ரூப் அட்மினுக்கு மட்டும் வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதேபோல், பயனர்கள் அழைப்பின் போது குறிப்பிட்ட நபர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். மேலும் பலர் அழைப்பில் சேரும்போது பயனர்கள் பார்ப்பதை எளிதாக்கும் புதிய இண்டிகேட்டர் ஒன்றையும் ஆப்ஸ் வெளியிட்டுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile