ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் pTron ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்,

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் pTron ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்,
HIGHLIGHTS

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் அறிமுகமானதில் இருந்து அதன் டிசைன் மற்றும் அம்சங்களுக்கு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன

தற்போது பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் அறிமுகமானதில் இருந்து அதன் டிசைன் மற்றும் அம்சங்களுக்கு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. பல்வேறு ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்களும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா தோற்றத்தில் புது மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விலை தகவல்.

இந்திய சந்தையில் புதிய பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடலின் விலை ரூ. 1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இது ரூ. 1199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை பிடிரான் வலைத்தளம் மற்றும் அமேசானில் நடைபெறுகிறது. புதிய பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடலுக்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.

pTron Force X12N சிறப்பம்சம்.

அம்சங்களை பொருத்தவரை புதிய பிடிரான் ஃபோர்ஸ் X12N மாடலில் 1.85 இன்ச் பெரிய HD டச் ஸ்கிரீன் மற்றும் 580 நிட்ஸ் டிஸ்ப்ளே பிரைட்னஸ், ஃபுளூயிட், கிளீன் இண்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் கேம்ஸ், 130-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், ஹார்ட் மாணிட்டர், ஸ்லீப், ஆக்டிவிட்டி டிராகிங் போன்ற வசதிகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ளன.

ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் பிடிரான் ஃபோர்ஸ் X12N முழுமையான காலிங் வசதி, கால் அலெர்ட்கள், டெக்ஸ்ட் மெசேஜ் அலர்ட்கள், சமூக வலைத்தள அலெர்ட்கள், விருப்பமான காண்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மியூசிக், கேமரா கண்ட்ரோல், ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வசதியை வழங்குகிறது.

பிடிரான் ஃபோர்ஸ் X12N ஸ்மார்ட்வாட்ச்-ஐ இயக்க பிடிரான் ஃபிட் பிளஸ் ஆப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் கிடைக்கிறது. இது உடல்நல விவரங்களை பிரத்யேக யூசர் இண்டர்ஃபேசில் அனிமேஷன் வடிவில் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo