விஜய் சேதுபதி யின் இந்த படம் நேரடியாக OTT யில் வெளியாகும் என அறிவிப்பு

HIGHLIGHTS

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டிலும் அவருக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி யின் இந்த படம் நேரடியாக OTT யில் வெளியாகும் என அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராக விஜய் சேதுபதி மாறிப் போயுள்ளார். பாலிவுட்டிலும் அவருக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கருத்து சுதந்திரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் இயக்குனர் இந்து இயக்கத்தில் ஒரு படம் உருவாக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் குறித்து பேசும் இந்த படத்திற்கு 19 (1) (a) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் ஆவலை தூண்டுவதாக உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile