இந்த ஜூன் மாதத்தில் OTT யில் வர இருக்கும் சூப்பர் திரைப்படங்கள்.

HIGHLIGHTS

ஜூன் மாதம் ஒடிடியில் வெளியாக உள்ள மாஸ் படங்கள் மற்றும் சீரீஸ்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது

ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன.

ஓடிடியில் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஜூன் மாதத்தில் OTT  யில் வர இருக்கும் சூப்பர்  திரைப்படங்கள்.

ஜூன் மாதம் ஒடிடியில் வெளியாக உள்ள மாஸ் படங்கள் மற்றும் சீரீஸ்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அந்த வகையில் ஜூன் மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், பிரித்திவிராஜ் நடிப்பில் வெளியான ஜன கண மன உள்ளிட்ட திரைப்படம் மற்றும் சில சீரீஸ்கள் ஓடிடியில் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

டான்:

அட்லி உதவி இயக்குனரான சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள டான் திரைப்படம் இந்த மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்நிலையில் வரும் ஜூன் 10-ம் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியாகிறது.

ஜன கண மன:

மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள ஜன கண மன திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் நெட்ஃபிளிக்சில் ஜூன் 2 வெளியாக உள்ளது. குயின்ஸ் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், ஸ்ரீ திவ்யா துருவன், ஷாரி, ஷம்மி திலகன், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹசில் (Hustle):

கூடைப்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள ஹசில் (Hustle) திரைப்படம் நெட்ஃபிளிக்சில் வரும் ஜூன் 8ம் தேதி வெளியாக உள்ளது.  ஜெரிமியா ஜாகர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'இந்த திரைப்படத்தில் ஆடம் சாண்ட்லர், குயின் லதிஃபா, பென் ஃபோஸ்டர், ராபர்ட் டுவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மைதான்:

இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மா இயக்கிய திரைப்படம் மைதான். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 3ந் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile