8 மாதங்களுக்கு பிறகு இந்த சேவை ட்விட்டரில் நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ட்விட்டர் கடந்த ஆண்டு நவம்பரில் தனது ப்ளீட்ஸ் (Fleets) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

ட்விட்டர் ப்ளீட்ஸ் அம்சம் ஆகஸ்ட் 3, 2021 முதல் பயன்படுத்த முடியாது என ட்விட்டர் தெரிவித்தது.

ட்விட்டர் ப்ளீட்ஸ் சோதனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, பிரேசில், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் தொடங்கி நவம்பர் வரை நீடித்தது.

ட்விட்டர் கடந்த ஆண்டு நவம்பரில் தனது ப்ளீட்ஸ்  (Fleets) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ப்ளீட்ஸ்  தொடங்குவதற்கு முன்பு சுமார் ஐந்து மாதங்களுக்கு சோதனை செய்யப்பட்டது, இப்போது வெறும் எட்டு மாதங்களுக்குள், ட்விட்டர் ப்ளீட்ஸ்  மூட முடிவு செய்துள்ளது.

ட்விட்டர் ப்ளீட்ஸ் அம்சம் ஆகஸ்ட் 3, 2021 முதல் பயன்படுத்த முடியாது என ட்விட்டர் தெரிவித்தது. ட்விட்டரில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ப்ளீட்ஸ் ஆப்ஷனை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்துவதில்லை.

ட்விட்டர் ப்ளீட்ஸ் சோதனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, பிரேசில், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் தொடங்கி நவம்பர் வரை நீடித்தது.

ப்ளீட்ஸ் அம்சம் மூலம் அதிக பயனர்களை ஈர்க்க ட்விட்டர் திட்டமிட்டு இருந்தது. ப்ளீட்ஸ் என்பது வாட்ஸ்அப் ஸ்டோரி போன்றே செயல்பட்டு வருகிறது. ட்விட்டர் பயனர்கள் தங்களது கருத்துக்களை எளிதில் பதிவு செய்ய வைக்கும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவே இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாக ப்ளீட்ஸ் ஆப்ஷன் ஆகஸ்ட் 3, 2021 முதல் செயல்படாது என ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. தற்போது இந்த ஆப்ஷன் நீக்கப்பட்டாலும், இதில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் ட்விட்டரின் மற்ற ஆப்ஷன்களில் படிப்படியாக வழங்கப்படும் என தெரிகிறது. 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :