Xiaomi யின் புதிய FX Mini LED TV அறிமுகம் 75-இன்ச் வரையிலான சைஸ் உடன் வரும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க
Xiaomi இன்று அதன் புதிய FX Mini LED TV சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது மிக சிறந்த வியூவ் HDR10+ support, மற்றும் Dolby Audio சப்போர்டுடன் வருவதால் தரமான சவுண்ட் குவாலிட்டி இருக்கும்,இதை தவிர இந்த டிவியில் , DLG 120Hz கேம் மோட் மற்றும் அல்க்ஸா ச்கமாந்து சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் வரும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyXiaomi TV FX Mini LED விலை தகவல்
xiaomi TV FX Mini LED 43-இன்ச் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 32,999 ஆகவும், 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 44,999, ரூ. 64,999 மற்றும் ரூ. 84,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லிமிடெட் கால அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, சியோமி நிறுவனம் 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடல்களை ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது ரூ. 29,999, ரூ. 39,999, ரூ. 59,999 மற்றும் ரூ. 79,999 விலைகளில் வழங்குகிறது. மேலும் இந்த Xiaomi TV FX Mini LED Xiaomi இந்தியாவின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் amazon, பிளிப்கர்டில் ஜூன் 11 அன்று விற்பனைக்கு வருகிறது
Xiaomi TV FX Mini LED TV சிறப்பம்சம்.
Xiaomi TV FX Mini LED சீரிஸ் 3840×2160 பிக்சல்கள் ரெசல்யூஷன், 178 டிகிரி வியூவ் என்கில் , விவிட் பிக்சர் என்ஜின் 2 மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆகியவற்றுடன் 43-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மினி LED டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது. 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் டிஸ்ப்ளேக்களில் DLG 120Hz, MEMC, ALLM, ஃபிலிம்மேக்கர் மோடு ஆகியவை உள்ளன.

இந்த டிவியில் மாலி-G52 MC1 GPU உடன் குவாட்-கோர் கார்டெக்ஸ் A55 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிவியில் 2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. மற்ற அம்சங்களில், உள்ளமைக்கப்பட்ட ஃபயர் டிவி அடங்கும், இதில் பிரைம் வீடியோ, நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உட்பட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கள் உள்ளன.
இதையும் படிங்க Lumio புதிய 55-மாடல் மார்கெட்டில் அறிமுகம், வேற லெவல் டிஸ்ப்ளே உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி
டிவி ரிமோட்டில் அமேசான் பிரைம் வீடியோ, நெட்ஃபிலிக்ஸ், அமேசான் மியூசிக், ஆப்ள், இன்டர்நெட் மற்றும் லைவ் ஆகியவற்றை விரைவாக அணுகுவதற்கு அலெக்ஸா பட்டன் உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் வைஃபை 802.11ac, ஏர்பிளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, மூன்று HDMI 2.0 மற்றும் இரண்டு USB 2.0 போர்ட்கள், ஒரு 3.5mm ஜாக், ஈதர்நெட் மற்றும் இரண்டு ஆன்டெனாக்கள் ஆகியவை அடங்கும்

. இந்த டிவி AV1, H.265, H.264, H.263, VP8/VP9, MPEG 1/2 மற்றும் MJPEG ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த டிவியில் 20W ஸ்பீக்கர்கள் உள்ளன மற்றும் இது டால்பி ஆடியோ, DTS X மற்றும் DTS Virtual:X ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
