Samsung TV Down: இந்த டிவி வாங்குனது ஒரு குத்தமா வேலையே செய்யல புலம்பும் மக்கள், X யில் பறக்கும் புகார்

Updated on 01-Aug-2025
HIGHLIGHTS

Samsung ஸ்மார்ட் டிவி பயனர்கள் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்கின்றனர்

நெட்ஃபிளிக்ஸ், பீகாக், யூடியூப் டிவி போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்கள் வேலை செய்யவில்லை

மேலும் டிவி தொடர்ந்து சர்வர் பிழையைக் காட்டுகிறது.

வியாழக்கிழமை மாலை அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான Samsung ஸ்மார்ட் டிவி பயனர்கள் ஒரு பெரிய சிக்கலை எதிர்கொள்கின்றனர். நெட்ஃபிக்ஸ், பீகாக், யூடியூப் டிவி போன்ற ஸ்ட்ரீமிங் ஆப்கள் வேலை செய்யவில்லை, மேலும் டிவி தொடர்ந்து சர்வர் பிழையைக் காட்டுகிறது. இதுவரை 2000 க்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன்டெடெக்டரில் (DownDetector)சாம்சங் டிவி சர்வர் செயலிழப்பைப் புகாரளித்துள்ளனர். இதன் விளைவு கிட்டத்தட்ட அமெரிக்கா முழுவதும் காணப்பட்டது.

இதனை தொடர்ந்து தென் கொரியாவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப உற்பத்தியாளரான சாம்சங் டிவிகளின் உரிமையாளர்கள் சமூக ஊடகங்களில் தாங்கள் அனுபவித்து வரும் குறைபாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது வரை, சாம்சங் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க:BSNL வெறும் ரூ,1 யில் 1 மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங், டேட்டா SMS பக்கா மாஸ் திட்டம் ஆகஸ்ட் முழுதும் ஜாலியோ ஜாலி

சோசியல் மீடியாவில் பரவும் புகார்

ட்விட்டர் எனப்படும் X பக்கத்தில் பெரும் அளவில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்அதில் ஒருவர் நான் கடந்த நள்ளிரவிலிருந்து என்ன TV பார்க்கமுடியவில்லை ஏன் என்றால் samsung சர்வர் டவுன் ஆகியுள்ளது என எழுதியுள்ளார்

மேலும் ஒருவர் எனது சாம்சங்கின் 5 ஆண்டு பழமையான டிவியில் Samsung server is down என காமித்ததால் எனது டிவி வீனகிவிட்டதோ என எண்ணி Samsung TV 2025 யின் புதிய டிவி வாங்கி வந்தேன் ஆனால் அதிலும் அதே சர்வர் இஸ்யூ காமித்த பிறகு samsung பக்கத்திலிருந்து சர்வர் இஸ்யூ என உணர்ந்தேன் என எழுதி இருந்தார்.

மேலும் ஒருவர் Samsung TV சர்வர் காரணத்தால் நான் டிவி ரீசெட் செய்தேன், நான் நினைத்தேன் இது எனக்கு மட்டும் தான் இருக்கிறது ஆனால் இங்கோ என்னை போல பலருக்கு இதே பிரச்சனை இருக்கிறது ரீசெட் செய்ததால் என்னால் எந்த ஆப் டவுன்லோட் செய்ய முயலவில்லை ஏன் என்றால் லாகின் பாஸ்வர்ட் மறந்துவிட்டேன் என எழுதி இருந்தார்.

இன்னும் சிலர்

இந்த செயலிழப்பு காரணம் என்ன?

சாம்சங் டிவி செயலிழப்பு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு தொடங்கியது, பயனர்கள் சர்வர் பிழை இருப்பதாகக் கூறி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவதாக தெரிவித்தனர். பயனர்கள் சமூக ஊடகங்களில் இதைப் பற்றி பதிவிட்டு, சாம்சங்கை டேக் செய்ததால், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் இந்த சிக்கலை நேரடி செய்திகளுக்கு எடுத்துச் சென்று வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :