43 இன்ச் கொண்ட Redmi Smart Fire TV 4K இந்தியாவில் அறிமுகம்.

Updated on 18-Sep-2023
HIGHLIGHTS

Redmi அதன் மிக குறைந்த விலை ஸ்மார்ட் 4K TV அறிமுகம்

இது விவிட் பிக்சர் எஞ்சின் தொழில்நுட்பம் மற்றும் குவாட் கோர் ஏ55 ப்ரோசெசருடன் கூடிய 4கே ஸ்மார்ட் டிவி ஆகும்.

இந்தியாவில் Redmi Smart Fire TV 4K யின் விலை மற்றும் இதன் சிறப்பம்சம் என்ன என்பதை பார்க்கலாம்.

Redmi அதன் மிக குறைந்த விலை ஸ்மார்ட்  4K TV அறிமுகம் இது 43 இன்ச்  கொண்டிருக்கும், இது விவிட் பிக்சர் எஞ்சின் தொழில்நுட்பம் மற்றும் குவாட் கோர் ஏ55 ப்ரோசெசருடன் கூடிய 4கே ஸ்மார்ட் டிவி ஆகும். இந்தியாவில் Redmi Smart Fire TV 4K யின் விலை  மற்றும் இதன் சிறப்பம்சம் என்ன என்பதை பார்க்கலாம்.

Redmi Smart Fire TV 4K யின் விலை

இதன் விலை பற்றி பேசினால்  விலையைப் பற்றி பேசுகையில், இது ரூ.26,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.24,999க்கு வாங்கலாம். இது Amazon மற்றும் Mi யின் வெப்சைட்டில்  வாங்குவதற்கு கிடைக்கும் அதன் விற்பனை தேதி குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Redmi Smart Fire TV 4K சிறப்பம்சம்

இந்த  Redmi Fire 4K TV சிறப்பம்சம்  பற்றி பேசினால், இது ஒரு  108cm  ஸ்க்ரீன்  சைஸ்  யில் கிடைக்கிறது  இது Fire OS இயங்குகிறது  4K Ultra HD ரேசளுசன் டிஸ்ப்ளே  உடன் விவிட் பிக்ஜர்  இஞ்சின்  டேக்நோலாஜி  உடன் வருகிறது. 

இது 24W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ மற்றும் DTS: Virtual X டெக்னோலாஜி  போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த டிவியில் குவாட் கோர் ஏ55 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது பெசல்-லெஸ் டிசைனுடன் வருகிறது. நிறுவனத்தின் இந்த ஃபயர் டிவி அலெக்சாவில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. இந்த டிவி ப்ளூடூத் 5.0 லிங்குடன் டூயல்-பேண்ட் வைஃபையையும் ஆதரிக்கிறது. டிவியில் பிக்சர் இன் பிக்சர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

Redmi Smart Fire TV 4K இல், Prime Video, Netflix, Disney + Hotstar, Jio Cinema, Zee5 போன்ற 12000+ ஆப்ஸில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இதனுடன், நீங்கள் Amazon MiniTV மற்றும் பிரபலமான நேரடி சேனல்களையும் ஸ்ட்ரீம் செய்யலாம். Apple AirPlay மற்றும் Miracast ஆகியவை இதில் ஆதரிக்கப்படுகின்றன.

இதை  தவிர இதில் அலெக்சா சப்போர்டுடன்  வருகிறது மற்றும் இதன் ரிமோட்டில்  டிடக்சன் பட்டன்  கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அலெக்சா பட்டனை  அழுத்தவும், நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும். ரிமோட்டில் மியூட் பட்டனும் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர, ரிமோட்டில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் அமேசான் மியூசிக் ஆகியவற்றிற்கான பிரத்யேக பட்டன்கள் உள்ளன. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :