பிலிப்ஸ் 4K டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது..!

பிலிப்ஸ் 4K டிவி  மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது..!
HIGHLIGHTS

இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

TPV . டெக்னாலஜி இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

புதிய டிவிகளில் பிலிப்ஸ் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 65 இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த LED . டி.விக்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது.

டிவி யின் டிஸ்பிளேயில் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கிரீன் நிறங்கள் சுவரில் பிரதிபலிக்கச் செய்கிறது. இத்துடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதால், அறையில் விர்ச்சுவல் சவுன்ட் மற்றும் எலக்ட்ரிக்கல் லைட் மின்ன செய்யும். புதிய டி.வி.க்களில் பிக்சல் பிரிசைஸ் HD  வழங்கப்பட்டிருக்கிறது. இது போட்டாவின் தரத்தை மேம்படுத்தி, அதிக தெளிவான டிஸ்பிலேவை காண்பிக்கிறது .

பிலிப்ஸ் 4K டி.வி.க்கள் (6100/ 6700 சீரிஸ்) HDR பிளஸ் மற்றும் SAPHI வழங்கப்பட்டு இருப்பதால் டி.வி. மற்றும் டேட்டாக்களை மிக எளிமையாக இயக்க வழி செய்கிறது. இதன் மைக்ரோ டிம்மிங் மென்பொருள் படத்தை 6400 வெவ்வேறு சூழல்களில் கண்டறிந்து, அதற்கு ஏற்ப தரத்தை மாற்றியமைக்கும்.

இதனுடன் டி.டி.எஸ்.HD  (DTS HD) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருப்பதால், சவுண்டு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, ஆடியோ தரம் இயற்கையாக வெளிப்படுகிறது. 

புதிய 22 இன்ச் ஃபுல் HD  . LED  டி.வி. மாடல் விலை ரூ.9,990 முதல் துவங்கி டாப்-என்ட் 65PUT6703S 65-இன்ச் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo