Hisense E7Q Pro 100-இன்ச் சைஸ் டிஸ்ப்ளே வரை அறிமுகம் வீடு இருக்கும் தியேட்டர் போல டிஸ்கவுண்ட் உடன் அமேசானில் வாங்கலாம்

HIGHLIGHTS

Hisense E7Q Pro QLED ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தையில் Hisense அறிமுகப்படுத்தியுள்ளது

இந்த ஸ்மார்ட் டிவிகள் 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 100-இன்ச் டிஸ்ப்ளே விருப்பங்களை வழங்குகின்றன

Hisense E7Q Pro-வின் அம்சங்கள் அதன் விலை போன்றவற்றைப் பற்றி இங்கே விரிவாகச் பார்க்கலாம்

Hisense E7Q Pro 100-இன்ச் சைஸ் டிஸ்ப்ளே வரை அறிமுகம் வீடு இருக்கும் தியேட்டர் போல டிஸ்கவுண்ட் உடன் அமேசானில் வாங்கலாம்

சிறந்த என்டர்டைன்மென்ட் அனுபவத்திற்காக டிசைன் உடன் Hisense E7Q Pro QLED ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தையில் Hisense அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 100-இன்ச் டிஸ்ப்ளே விருப்பங்களை வழங்குகின்றன. Hisense E7Q Pro-வின் அம்சங்கள் அதன் விலை போன்றவற்றைப் பற்றி இங்கே விரிவாகச் பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Hisense E7Q Pro விலை தகவல்

Hisense E7Q Pro யின் விலை மற்றும் விற்பனை பற்றி பேசும்போது இதன் 55-இன்ச் மாடல் விலை ரூ,42,999 மேலும் இதன் 65-இன்ச் மாடல் விலை ரூ,62,999 ஆக வைக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த 100-இன்ச் டிவியின் மாடல் விலை வெளியாகவில்லை மேலும் இந்த டிவியை இ-காமர்ஸ் தளமான அமேசானில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது . அறிமுக சலுகைகளில் 1 வருட ஜியோஹாட்ஸ்டார் பிரீமியம் மெம்பர் , நோ கோஸ்ட் EMI விருப்பம் மற்றும் இந்த விலையில் சிறந்த எக்ஸ்சேஞ் சலுகைகள் ஆகியவை அடங்கும். மேலும் இதை பேங்க் ஆபருடன் வெறும் ரூ,40,999 யில் வாங்கலாம்

Hisense E7Q Pro சிறப்பம்சம்

கேமர்களை இலக்காகக் கொண்டு Hisense தனது புதிய E7Q Pro QLED ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த டிவி 144Hz வேரியன்ட் ரெப்ராஸ் ரேட் (VRR), AMD ஃப்ரீசின்க் பிரீமியம் சப்போர்ட் மற்றும் பல கேமிங் அம்சங்களை வழங்குகிறது.

Hisense E7Q Pro என்பது 4K அல்ட்ரா HD (3840×2160) ஸ்மார்ட் டிவி ஆகும், இது 55-இன்ச், 65-இன்ச் மற்றும் 100-இன்ச் என மூன்று சைஸ்ல் கிடைக்கிறது. இதில் லோ -லிட்ரசி கேம் மோட் , கேம் பார் இன்டர்பேஸ் , AI ஸ்மூத் மோஷன் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. டாப்-எண்ட் 100-இன்ச் மாடல் உள்ளமைக்கப்பட்ட சப் வூஃபர் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

கனேக்டிவிட்டிக்காக , டிவியில் புளூடூத் 5.0, HDMI 2.1, USB 3.0 மற்றும் Apple AirPlay மற்றும் Apple Home ஆகியவற்றிற்கான ஆதரவு ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க 32 இன்ச் கொண்ட ப்ரேண்டட் TV வெறும் ரூ,10,000க்குள் வாங்கலாம் வேற லெவல் ஆபர்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo